பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 23

இவைகளில் மற்ற ஆட்டக்காரர் பந்தை விளையாடு முன்னே தானே இரண்டாவது முறையாகப் பந்தை விளையாடுதல் தவறு.

(ஆ) 6 விநாடிகளுக்கு மேல் ஒரு இலக்குக் காப்பாளர் பந்தைப் பிடித்திருந்தால் அது தவறு.

(இ) எதிராளியை இடித்தல் விதிக்குட்பட்டது என்றாலும், தவறான நேரத்தில் எதிராளியை இடித்தல் தவறு.

(ஈ) ஒறுநிலை உதையினை எடுக்கும் நேரத்தில், பந்தை முன்னோக்கி உதைக்காமல் இருத்தல் தவறு.

(உ) அபாயகரமாக விளையாடுதல் தவறு. (ஊ) பந்துடன் இல்லாமல் இருக்கும் பொழுதோ, அல்லது எதிராளிக்குத் தடையேதும் செய்யாமல் இருக்கும்பொழுதோ இலக்குக் காவலனை இடித்தல் தவறு.

(எ) முறை தவறி பண்பாடில்லாமல் நடந்து கொள்ளல் தவறாகும். 5. 3{uusSILib (Off-Side)

தன் குழுவினரால் பந்து ஆடப்படும் நேரத்தில், எதிர்க் குழுவினரின் பகுதியில் பந்துக்கு முன்னே அடுத்தவர் இலக்குக்கு அருகிலேயே ஒரு எதிரணி ஆட்டக்காரர் நின்று கொண்டிருந்தால், அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவார்.

ஒரு ஆட்டக்காரர் தான் பந்தைப் பெறும்போது எங்கிருந்தார் என்பதில்லை. எந்தச்சமயத்தில் அவர் தமது பாங்கர்களிடம் இருந்து பந்தைப் பெற்றார் என்பதைக் கணித்தே அயலிடம் குறிக்கப்படும்.

அதே சமயத்தில், ஒரு ஆட்டக்காரர், கீழ்க்காணும் விதிகளின்படி இருந்தால், அயலிடத்தில் உள்ளவர்களாக கருதப்படமாட்டார்.

(அ) தன்னுடைய சொந்தப் பகுதியில் நிற்கும் பொழுது.

(ஆ) தான் நிற்கும் இடத்திற்கு முன்னதாக எதிர்க் குழுவினரில் யாராவது இருவர், இலக்குக்கு அருகாமையில் நின்றுகொண்டிருக்கும் பொழுது.

(இ) தான் அயலிடத்தில் இருந்தபோது எதிர்க்குழுவினரின்மேல் பந்து பட்டுத் தன்னிடத்தில் வந்தாலும், தன்னால் பந்து கடைசியாக ஆடப்படும் பொழுது.

(ஈ) குறியுதை, முனை உதை, உள்ளெறிதல் இன்னும் நடுவரால் கீழே எறிந்து விடப்படும் பந்தைத்தானே நேராக எடுத்தாடும் பொழுது.