பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 விளையாட்டுக்களின் விதிகள் =

சர்வீஸ் போடுபவர், தான் நிற்கும் இடத்திலிருந்து மூலைவிட்ட

முறையில் உள்ள வலையின் எதிர்ப்பகுதியில் (Diagonaly opposite) உள்ள சர்வீஸ் தரைப் பகுதியில் (Service court) அல்லது அதன் எல்லையைக் குறிக்கும் கோட்டில் பட்டாலும், (பந்தை எடுத்தாடுபவர் எடுத்தாடுவதற்கு முன்னதாக) அது சரியான சர்வீஸ் என்றே கருதப்படும். -

- 4. தவறான சர்வீஸ் சர்வீஸ் போடுபவர் விதிகளை மீறியிருந்தால் அதாவது:

(அ) சர்வீஸுக்காக மேலே உயர்த்தி எறிந்த பந்தை அடிக்காமல் தவற விட்டுவிட்டால், -

(ஆ) சர்வீஸ் பே ாட்பேந்தானது. வலையைத் தொடாமல், ஆடுகளத்தில் உள்ளகம்பம், மற்றும் நிலையான பொருட்களின் மீது பட்டு, அதன் பிறகு சரியானசர்வீஸ் பகுதியில் விழுந்தால்,

மேலே குறிப்பிட்டிருப்பது போல, முதல் வாய்ப்புள்ள (First serve) சர்விஸைத் தவறாகப் போட்டாலும், மீண்டும் இரண்டாவது முறையாக சர்வீஸ் போடுகிற வாய்ப்பு அவருக்கு உண்டு.

தவறான சர்வீஸ் போட்டிருப்பது கண்டுபிடிக்கும் சமயத்தில், அந்த முறை ஆட்டம் முடிந்துவிட்டிருந்தால், சர்வீஸ் போடுகிற வாய்ப்பானது மாற்றப்படாமல் அப்படியே இருக்கும். கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் இருந்த சர்வீஸ் தவறானது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது. -

சர்வீஸ் போட்டு, சரியான சர்வீஸ் எல்லைப்பகுதிக்குள் விழுந்த உடனேயே, பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. வேண்டும் என்றே அறிவிக்காதவரையில், அந்தக்குறப்பிட்டவெற்றி எண்ணுக்கான (point) முடிகிற வரை பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். - -

சர்விஸ் போடுகிறவர் வெற்றி எண் ஒன்றைப் பெறுகிற offensosor (Wins the point)

(அ) வலையைத் தொடாமல், அல்லது வேறு எந்தத் தவறும் இல்லாமல், சர்வீஸ் பந்தானது எடுத்தாடும் ஆட்டக்காரர் மீது பட்டால், அல்லது அவர் அணிந்திருக்கிற உடை அல்லது வைத்திருக்கிற

பொருள் மீது தரையில் விழுவதற்கு முன்தொட்டுவிட்டால், அவரது சர்வீஸுக்கு வெற்றி எண் கிடைக்கும். -