பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா -- 259

செய்யலாம். அல்லது குறிப்புரை பெற்ற ஆட்டக்காரர். ஆட்டத்தை விட்டே நீக்கப்படலாம். * - -

2. நடுவருக்குத் தெரியாமல் சைகை மூலம் குறிப்புரை தந்தால், தனக்குத் தெரிந்தவுடன் நடுவர், உரிய தண்டனை தரலாம். தெரியாதபோது, எதிராட்டக்காரர் நடுவருக்குத் தெரிவித்தால், தெரிந்த உடனே தண்டனை தரவேண்டும். - -

முடிவு: குறிப்புரை பெறுகிறபோது ஆட்டக்காரர் ஆடுகளத்திற்கு வெளியே இருந்தால் அது தவறில்லை.

6. இரட்டையர் ஆட்டம் (Doubles)

ஒற்றையர் ஆட்டத்திற்குரிய விதிமுறைகள் எல்லாம், இரட்டையர் ஆட்டத்திற்கும் பொருந்தும். -

ஒரு ஆட்டக்காரர் முதல் வெற்றி எண்ணுக்காக சர்வீஸ் போட்டு ஆடிய பிறகு, மற்ற ஆட்டக்காரர்.தங்களுக்கு வருகிற சர்வீஸ் போடும் வரிசைமுறைப்படியே சர்வீஸ் போடவேண்டும். அதாவது 2வெற்றி எண் எடுப்பது போல, 2 முறை சர்வீஸ்கள் போடும் வாய்ப்பு உண்டு. அந்தத்தொகுப்பாட்டத்தில் சர்வீஸ் போடவும் எடுக்கவும் என்று எப்படி தீர்மானித்து வந்தார்களோ அந்தப்படியே அந்தத் தொகுப்பாட்டம் முடிவதற்காக ஆட வேண்டும். - . sitssio Gum Glp &pg). Upsop (Rotation of Service)

ஆட்டக்காரர் அல்லது இரட்டையர் ஆட்டத்தில் உள்ள இருவரும் சமநிலைச் சிக்கலைத் தீர்க்க, யார் முதலில் முதல் சர்வீஸைப் போட்டாரோ, அவரே முதல் முறை ஆட்டத்தில் போடப்படுகிற சர்வீஸை எடுத்தாடும் முதல் ஆட்டக்காரராக இருப்பார். -

இதைவிட, வேறு எந்த முறைகளையும் சிக்கலை சரி செய்யப்

பயன்படுத்தக் கூடாது. அனுமதியும் கிடையாது.