பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 265

3. வெற்றி எண் என்பது, ஆட்டத்தில் ஒருவர் வெற்றி பெற்று, வெற்றி வாய்ப்பைத் தருகிற வெற்றி எண் பெறுகிறார் என்பதைக் (55,55th (Point). - -

4. மட்டையைப் பிடித்து பந்தை அடித்தாடுகிற கையை, மட்டையைப் பயன்படுத்தும் கை என்று அழைக்கிறோம் (Rocket Hand). ---

5. மட்டை இல்லாத கையை, பயன்படா திறந்த கை (வெறுங்கை) ஆகிறது (Free hand) என்று கூறுகிறோம்.

6. ஒரு ஆட்டக்காரர் பந்தை அடிக்கிறார் என்றால், தன் கையிலுள்ள மட்டையால் பந்தை அடிக்கிறார் என்று அர்த்தம். அப்படி அடிக்கும் போது, அவர் பிடித்திருக்கும் மட்டை, அவரது அடிக்கும் கை மணிக்கட்டுக்குக் கீழாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும்.

7. சர்வீஸ் போடுபவர், பந்தை ஆட்டத்திலிடுவதற்காக, தனது மட்டையால் பந்தை அடித்து அனுப்புபவர் ஆவார்.

8. சர்வீஸை எடுப்பவர் என்பவர், சர்வீஸ் பந்தை இரண்டாவது தடவையாக அடித்தாடி அனுப்புபவர் ஆவார்.

9. நடுவர் என்பவர், இருவரும் மாறி மாறி அடித்தாடுகிற பந்தில் ஏற்படுகிற முடிவினைப் பற்றித் தீர்மானிப்பவர் ஆவார்.

3. சரியான சர்வீஸ் முறை (A Good Service)

1. சர்வீஸ் போடுவதற்காக, உள்ளங்கையில் வைக்கப் பட்டிருக்கும் பந்து, எதிராளி பார்வைக்கு நன்கு தெரிவது போல, அசையாமல் வைத்திருக்க வேண்டும். விரல்கள் நான்கும் சேர்ந்தாற்போல், கட்டைவிரல் பிரிந்திருப்பதுபோல, உள்ளங்கையை விரித்து, அதில் பந்தை ஆடாமல் இருப்பதுபோல, தட்டையாக (Fat) வைத்திருக்க வேண்டும்.

2. அவ்வாறு விரிக்கப்பட்ட உள்ளங்கையில் வைக்கப்பட்ட பந்தானது, ஆடப்பயன்படும் மேசைபரப்புக்கு சற்று மேலே இருப்பது போலவே இருத்தி வைக்க வேண்டும்.

3. பந்தை அடிப்பதற்காகக் கொண்டு வருகிற மட்டையானது, பந்தை அடிப்பதற்கு முன்பாக, ஆடப் பயன்படும் மேசைப் பரப்புக்கு மேலே இருப்பது போன்ற உயர அளவில் இருந்தே கொண்டு வர வேண்டும்.