பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 . விளையாட்டுக்களின் விதிகள் *Eo

4. சர்வீஸ் செய்பவர், தனது கையிலுள்ள பந்தை குறைந்தது 16 சென்டி மீட்டர் உயரமாவது மேலே வருவது போல உயர்த்திப் போட்டுத்தான் மட்டையால் அடிக்க வேண்டும். பந்தை உயர்த்திப் போடுகிறபோது, அது சுழல்வது போல சுழல (spin) விடக் கூடாது.

5. உயரே சென்று கீழாக வருகிற பந்தைத்தான், மட்டையால் அடித்து அனுப்ப வேண்டும். so -

6. ஒற்றையர் ஆட்டத்தின் போது செய்யப்படுகிற சர்வீஸ், முதலில் அவரது பக்கம் உள்ள மேசைப் பரப்பின் மீது படுவதுபோல் அடித்து, அதன் பிறகு வலையைக் கடந்து, எதிராட்டக்காரர் மேசைப் பகுதியில் போய் விழுவது போல, அடித்து அனுப்ப வேண்டும்.

7. இரட்டையர் ஆட்டத்தின் போது, சர்வீஸ் செய்பவரின் வலது புற மேசைப் பகுதியில் முதலில் பட்டு, நேராக வலையைக் கடந்து, பந்தை எடுத்தாடுபவரின் வலதுபுற மேசைப் பகுதியில் (Right Half court) போய் விழுமாறு அடித்து அனுப்பவேண்டும்.

8. பந்தை அடித்து சர்வீஸ் போடுகிற சமயத்தில், தனது மேசைப் பகுதியில் உள்ள கடைக் கோட்டுக்குப் பின்புறமிருந்து, அல்லது கற்பனைக் கோடு செல்லும் அளவுக்கு (மேசையின் பின் அளவு) உரிய பின்புறத்திலிருந்துதான் சர்வீஸ் போட வேண்டும். ஆனால், சர்வீஸ் செய்பவர்உடலுக்குப்பின்புறமாக அல்லது கைப்புறம்,தலை அல்லது கால்களுக்குப் பின்புறமாகப் பந்தைக் கொண்டு போய் சர்வீஸ் போடக் கூடாது. அதாவது, வலையிலிருந்து அதிக தூரம் பின்புறத்திற்குப் பந்தை (Back) கொண்டு போய் அடித்தாடக்கூடாது.

9. மேலே கூறிய முறைகளில், நடுவருக்குப் பந்தானது நன்கு புலனாகும்படி செய்யப்படுகிறபோதுதான், அது சரியான சர்வீஸ் என்று அங்கீகரிக்கப்படும். -

10. அவர் சரியாக சர்வீஸ் போடவில்லை என்று நடுவர் சந்தேகப்படுகிறபோது, அவர்சந்தேகத்தின் அடிப்படையில் மீண்டும் சரியாகச் செய்யுமாறு சொல்லாமல், அந்த சர்வீஸ் சரியில்லை என்ற காரணத்துடன், அவருக்கு 1 வெற்றி எண் இழப்பு உண்டாகுமாறு எதிராளிக்கு அளித்து நடுவர் ஆணையிடுவார்.

சரியான சர்வீஸ் செய்யவில்லை என்ற சந்தேகம் நடுவருக்கு எழுகிறபோது, எச்சரிக்கை எதுவும் தராமலே, ஒரு வெற்றி எண்ணை இழக்கும் தண்டனையைத் தந்துவிடுவார்.