பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

2. நடுவரின் அபிப்பிராயப்படி, சர்வீஸ் போடுகிறபோது: எதிராட்டக்காரர் அல்லது எதிர்க்குழு ஆடத் தயாராக இல்லாமல் இருந்தால்;

3. பந்தை ஆடி சர்வீஸ் போடும்போதும் அல்லது அடித்தாடி திருப்பி அனுப்புகிற போதும், வெளியிலிருந்து ஏற்படுகிற தொந்தரவுகளால், சரியாக ஆட இயலாது போனால்;

4. சர்வீஸ் போடுகிற 8 முறையில் ஏற்பட்டுவிடுகிற தவறை சரி செய்து நிவர்த்திக்கிற நிலைமையிலும், -

5. சர்வீஸ் பே ாடுகிறவரின்செயல்பாடு, விதிகளுக்குட்பட்டதாக அமையவில்லை என்று நடுவர் சந்தேகப்படுகிறபோதும்; அல்லது ஒரு ஆட்டக்காரர் மாற்றிக் கொண்ட மட்டையைப் பற்றி சந்தேகப்படுகிறபோதும்;

6. ஆட்ட சூழ்நிலையை பாதிப்பது போல, வெளியிலிருந்து ஏற்படுகிற இடைஞ்சல்களுக்காகவும்:

மேலே கூறிய காரியங்களில் ஏதாவது ஒன்று நடந்தாலும், ஆடப்பட்ட பந்துக்காக, மீண்டும் அதே வெற்றி எண்ணுக்காக விளையாடுகிற சூழ்நிலை ஏற்படுவதையே மீண்டும் ஆடுதல் (Let) என்கிறோம்.

6. வெற்றி எண்களும் வெற்றியும் (A Point) 1. சரியாக சர்வீஸ் போடுவதில் தவறு ஏற்படுகிறபோது, 2.திருப்பிபந்தை அனுப்பும்போது தவறு ஏற்படுகிறபோது 3. பந்து எடுத்தாடாமல், தடைசெய்வதுபோல நின்றுவிடுவது;

4. தொடர்ந்தாற்போல், தானே இரண்டு முறை பந்தை விளையாடுவது; -

5. பந்து ஒருவரது மேசைப் பகுதியில் இரண்டு முறை தொடர்ந்தாற்போல் விழுந்து விடுகிறபோது;

6. விதிகளுக்குட்படாது அமையப்பெற்ற ஒரு பக்க மட்டையால் பந்தை அடித்தாடுகிற போது:

7. பந்தை விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, ஆடுகிற மேசையை நகர்த்தி விடுகிறபோது;