பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வீஸ் போடுகிற முறை

270 விளையாட்டுக்களின் விதிகள் =

2 தேர்வில் வென்றவர் அல்லது அந்த அணி, தான் சர்விஸ் போடுவதா அல்லது சர்வீஸை எடுத்தாடுவதா என்பதை முடிவு செய்ய, எதிராட்டக்காரர் அல்லது எதிரணி, ஆடுகளப் பக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். - * - இரட்டையர் ஆட்டத்தில்

முதலில் சர்வீஸ் போடுகிற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் அணியில், யார் முதலில் சர்வீஸ் போடுவது என்பதையும் முடிவு செய்திட எதிர்அணியிலும் யார் முதலில் சர்வீஸை எடுத்து ஆடுவது என்பதும் முடிவெடுக்கப்படவேண்டும். -

பிறகு தொடர்ந்து வருகிற முறை ஆட்டங்களில், முன்பு விளக்கியிருப்பது போலவே ஆட்டம் தொடரும்.

5 வெற்றி எண்களுக்காக சர்வீஸ் போட்ட அணியின் சர்வீஸ் வாய்ப்பு முடிய, சர்வீஸை எடுத்தாடிய எதிராட்டக்காரர். இப்போது சர்வீஸ் போடுபவராக வாய்ப்பைப் பெறுகிறார். இப்படியே இரு அணி ஆட்டக்காரர்களும் 5 சர்வீஸ் போட்டு, ஆட்டத்தைத் தொடர, முதலில் 20 வெற்றி எண்களைப் பெறுகிற அணியே அந்த முறை ஆட்டத்தில் வெற்றி பெறும். - இரட்டையர் ஆட்டத்தில் சர்வீஸ் வாய்ப்பு முறை

1. முதலில் சர்வீஸ் போடுகிற வாய்ப்பைப் பெற்றவர் (தேர்வு செய்யப்பட்டவர்) முதலில் சர்வீஸ் போட, எதிராட்டக்காரரில் ஒருவர், சர்வீஸை எடுத்தாடுகிற வாய்ப்பைப் பெறுகிறார்.

2. இரண்டாவதாக சர்வீஸ் போடுகிற வாய்ப்பை, எதிரணியில் முதலாவதாக சர்வீஸை எடுத்தாடியவர் பெறுகிறார். எதிரணியில் உள்ள அடுத்த ஆட்டக்காரர். இப்போது பந்தை எடுத்தாடும் வாய்ப்பைப் பெறுகிறார். - - -

3. மூன்றாவதாக சர்வீஸ் போடுகிற வாய்ப்பை, முதலில் சர்வீஸ் போட்டவரின் பாங்கர் (Partner) பெறுகிறார். அதை இரண்டாவதாக சர்வீஸ் போட்டவரின் பாங்கர், பந்தை எடுத்தாடும் வாய்ப்பைப்

பெறுகிறார்.

4. நான்காவதாக சர்வீஸ் போடுகிற வாய்ப்பை, முதன் முதலாக சர்வீஸ் போட்டு ஆட்டத்தைத் தொடங்கியவரின் பாங்கர் பெற, இப்படியே மாறி மாறி ஆட்ட முறை தொடர்ந்து வந்து கொண்டே யிருக்கும்.