பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 281

4. Luolg5luto el Lib (Pitcher’s Plate)

பந்தெறிபவர் நின்றெறியும் கட்டமானது மரப்பலகையால் அல்லது ரப்பரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அது 24 அங்குல நீளமும் (60 செ.மீ.), 6 அங்குல அகலமும் (15 செ.மீ.) உடையதாகவும் இருக்க வேண்டும். அதன் மேற்பகுதி தரையோடு இருப்பது போல்தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அடித்தாடும் தளம் காட்டும் எல்லைக் கோட்டின் வெளிப்புறப் பகுதியில் இருந்து 46 அடிதுரம் (14 மீட்டர்) ஆண்கள் ஆட்டத்திற்கு என்று குறித்து வைக்கப்படல் வேண்டும். பெண்கள் ஆட்டத் திற்குரியதுரம் 40 அடி(12 மீட்டர்). 14 வயதுக்குட்பட்டபையன்கள் -40 அடி (12 மீட்டர்), 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள்-35 அடி(10.5 மீட்டர்). -

5. 5smississir (The Bases)

ஒவ்வொரு தளமும் 15 அங்குல நீள அகலமுள்ள சதூக்கட்டம் போல, கேன்வாஸ் அல்லது அதற்கிணையான பொருத்தமான பொருட்களால் ஆக்கப்பட்டு, தளங்களுக்குரிய இடங்களில் நகராமல், சிறந்த முறையில் தைக்கப்பட்டிருக்கவேண்டும்.

6. கையுறைகள் (Gioves)

எந்த ஆட்டக்காரர் விரும்பினாலும், கையுறைகளை அணிந்து கொள்ளலாம். முதல் தளக் காப்பாளரும் பந்தெறிபவர் எறியும் பந்துகளைப் பிடிப்பவரும் (Catcher) அடிக் கையுறைகளை (Mits) அணிந்து கொள்ளலாம். ஆட்டக் காலணியை ஒவ்வொருவரும் அணிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்பாகம் மென்மையான அல்லது ரப்பர் பொருளால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். மென்பந்தாட்டத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட காலணிகளையும் அணிந்து கொள்ளலாம்.

4. ஆட்டக்காரர்களும், மாற்றாட்டக்காரர்களும் strzm s, Lsirgssir (Regular Players)

ஒரு குழுவிற்கு 9 ஆட்டக்காரர்கள் உண்டு. ஒரு குழுவானது ஆட்டத்தைத் தொடங்க அல்லது தொடர்ந்து ஆட 9 ஆட்டக் காரர்களைக் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஒன்பது ஆட்டக்காரர்களும் தாங்கள் ஆடுகின்ற இடத்திற்கு ஏற்ப பெயரினைப் பெறுகின்றார்கள். அது பின்வருமாறு: