பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 விளையாட்டுக்களின் விதிகள் - >

4. ஒரு போட்டி ஆட்டத்தில் 7 முறை ஆட்டங்களையும் கட்டாயம் ஆடித்தான் ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில், முதலில் தடுத்தாடி இரண்டாவதாக அடித்தாடவருகின்ற குழுவானது ஆறு முறை ஆட்டங்களிலும் அதிகமான ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் அல்லது ஏழாவது முறை ஆட்டத்தில் மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழப்பதற்கு முன்னும் ஆட்டத்தை ஆடாமல் நிறுத்திவிடலாம்.

5. 7 முறை ஆட்டங்களையும் ஆடி முடித்த பிறகும் இரு குழுக்களும் வெற்றி தோல்வி காணாது சமநிலையில் இருந்தால், மேலும் அதிகமாகக் கூடுதல் (Additional) முறை ஆட்டங்களைத் தொடர்ந்து ஆடவேண்டும்.அதாவது,அந்தக்கூடுதல் முறை ஆட்டம் முடிவடையும் போது, யார் அதிக ஒட்டங்கள் எடுத்திருக்கின்றாரோ, அந்தக் குழுவினரே வென்றவராவார் அல்லது பந்தடித்தாடும் ஒரு குழுவினர் தங்கள் ஆட்டக்காரர்களின் இரு ஆட்டக்காரர்களை இழந்து மூன்றாம் ஆட்டக்காரரை இழப்பதற்குள் (At Bat) அதிகமான ஓட்டங்களை எடுத்திருந்தாலும் அந்தக் குழுவே வென்றதாகக் கொள்ளப்படும்.

6. ஐந்து முறை ஆட்டங்கள் அல்லது முழு அளவு முறை ஆட்டங்கள் ஆடி முடித்த பிறகும், இரண்டு குழுக்களும் சமமான எண்ணிக்கையில் ஓட்டங்கள் எடுத்திருந்தால், அல்லது இரண்டாவது பந்தடித்தாட வாய்ப்பு பெற்றக் குழு (Second at Bat) முடிவடையாத முறை ஆட்டத்தில் எதிர்க்குழு எடுத்திருந்த ஓட்டங்களுக்குச் சமமாக (Tie) முடிந்ததென்றே கருதி அறிவிக்கப் படும்.

7. ஒரு முறையான போட்டி ஆட்டத்தில், ஆட்ட இறுதியில், அதிகமான ஓட்டங்களை எடுத்தக் குழுவே வென்றதாக அறிவிக்கப்படும். -

8. முறையானபோட்டி ஆட்டம் இரு குழுக்களின் சமமான ஓட்ட எண்ணிக்கையில் முடிந்திருந்தால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டுமானால், ஆரம்பத்திலிருந்து தொடங்கியே ஆடவேண்டும் (Replay). -

9. ஒவ்வொரு முறையும் ஒரு பந்தடி ஆட்டக்காரர், முறையாகப் பந்தை அடித்துவிட்டு, முதல், இரண்டாம் மூன்றாம் தளங்களை மிதித்து (தொட்டு)விட்டு, முதலில் பந்தடித்தாடிய தளத்திற்கு வந்து சேர்ந்துவிட்டால் (அதாவது மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்ட மிழப்பதற்குள்) ஒரு ஓட்டம் (One Run) எடுத்ததாகக் குறிக்கப்படும்.