பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 289

வரிசையில் உள்ள ஆட்டக்காரர், திரும்பவும் ஆடத் தொடங்குகின்ற அடுத்த முறை ஆட்டத்தில், முதலாவது பந்தடி ஆட்டக்காரராக ஆக்கப்படுவார். - -

(இ) தவறான ஆட்டக்காரர் வந்து ஆடி, பிறகு அடுத்த பந்தடி ஆட்டக்காரர் வந்து நின்று, முதலாவது பந்தும் எறிந்த பிறகு (First pitch) இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், தவறாக வந்து ஆடியவர் வாய்ப்பு சரியானது என்றே ஏற்றுக்கொள்ளப்படும்.

அப்பொழுது எடுத்திருந்த ஓட்டங்கள், மாறியிருந்த தளங்கள் எல்லாம் சரியானதென்றே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு அடுத்து பந்தடிக்கும் வாய்ப்பு, தவறாக வந்து ஆடியவருக்கு அடுத்தப் பெயருள்ளவருக்கே கொடுக்கப்படும். யாரும் ஆட்டமிழந்தார் என்று நடுவர் அறிவிக்கமாட்டார்.

தனக்குரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிட்ட பந்தடி ஆட்டக்காரருக்குத் திரும்பும் வாய்ப்பு அப்பொழுது கிடைக்காது. அவர் தனது ஆடும் வாய்ப்பை அந்த முறை ஆட்டத்தில் இழந்து போகிறார். மீண்டும் அவருக்கு எந்தமுறை ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுதுதான் வாய்ப்பு கிடைக்கும்.

(ஈ) தவறாக வந்தவரது ஆடும் வாய்ப்பு முடிவதற்குள், மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிட்டால், அடுத்த முறை ஆட்டத்தில், இவரே முதலாவது பந்தடி ஆட்டக்காரராக இருப்பார்.

8. பந்தடிக்கும் ஆட்டக்காரர் எதிர்க்குழுவின் பந்தைப் பிடிப்பவருக்குரிய பணியான பந்தை தடுத்தாடுவது (Fielding) அல்லது பந்தை எறிவது (Throwing) போன்ற பணிகளில் ஈடுபடும்போது, அடித்தாடும் கட்டத்திற்கு வெளியே வந்து தடை செய்வது கூடாது. அல்லது தான் நின்றும், அடித்தாடும் கட்டத்திற்குள் நின்று கொண்டு வேண்டுமென்றே தடைசெய்வதும் கூடாது.

தண்டனை: பந்து நிலைப் பந்தாகிறது. பந்தடி ஆட்டக்காரர் இடையூறு விளைவித்தார் என்று நடுவர் எண்ணுகின்ற சமயத்தில், தள ஓட்டக்காரர்கள் முதலில் எங்கு நின்றார்களோ, அதன்படி அவரவர்கள் பழைய இடங்களுக்கே திரும்பி வந்துவிடவேண்டும். அத்துடன் பந்தடி ஆட்டக்காரரும் ஆட்டம் இழப்பார். ஆனால் அதில் விதிவிலக்குகளும் உண்டு.

(அ) அதாவது ஆட்டக்காரர் இடையூறு விளைவிக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தத் தளத்திற்கு ஒடும்போது தொடப்பட்டு ஆட்டமிழந்து போனால், பந்தடி

ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க மாட்டார்.