பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 291

(அ) மூன்றாவது அடி (Third Strike) என்று நடுவர் அறிவிக்கின்ற பொழுது, பந்தைத் தவறவிடாமல், பந்தைப் பிடிப்பவர் பிடித்துவிட்டால்.

(ஆ) முதல் தளத்தில் இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் நின்று கொண்டிருந்தால்.

(இ) பந்தைப் பிடித்தாடும் கட்டத்தில் இருந்து கொண்டே பந்தைப் பிடிப்பவர் தவறான முறையில் மட்டையில் பந்து பட்டு விடுவதை ஒவ்வொரு தடவையும் பிடித்துவிட்டால்.

தண்டனை: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் தொடப்பட்டால் ஆட்டம் இழந்துவிடுவார்கள் என்ற சூழ்நிலையில் ஓடி, தளம் மாறிக் கொள்ளலாம். அது மூன்றாவது அடியாக இருந்தால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்து விடுவார்.

(ஈ) பந்தடி ஆட்டக்காரருக்கு இரண்டு அடிகளுக்கும் (Two Strikes) குறைவாக இருக்கும்பொழுது, தவறான ஒவ்வொரு பந்தும், உயரத்தில் வரும்போது விதிகளுக்கேற்ப பிடிக்கப்படாமல் இருந்தால்.

(உ) பந்தெறியால் வரும் பந்தை அடிக்க முயலும்பொழுது அது மட்டையில் படாமல், பந்தடிப்பவரின் உடலில் ஏதாவது ஒரு பாகத்தைத் தொட்டுவிடுதல்.

(ஊ) பந்தடிக்காரர் அடித்தாடிய பந்தானது, அவர் பந்தடித்தாடும் கட்டத்திற்குள் இருந்து, இரண்டு அடிகளுக்கான வாய்ப்புடன் ஆடுகிறபொழுது, அவரின் உடலில் அல்லது உடைமையில் பட்டு (தவறான ஆடுகள) வெளிப்பகுதிக்குச் சென்றுவிட்டால்.

தண்டனை: பந்து நிலைப்பந்தாகி விடுகிறது. தள ஓட்டக் காரர்கள் ஓடியிருந்தாலும், மீண்டும் அவர்கள் தங்களது பழைய இடத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். திரும்பி வரும்பொழுது தொடப்பட்டாலும், அவர்கள் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட

LDITL-L-ITIT56II. 12. பந்து (Ball) என்று அழைக்கப்படும் பொழுது

(அ) பந்தெறிபவரால் (Pitcher) எறியப்படுகின்ற பந்தானது அடித்தாடக் கூடிய பகுதிக்குள் போகாமலும், பந்தடித்தாடும் தளத்திற்குப் போவதற்கு முன்னதாகவே தரையைத் தொட்டு விட்டாலும், அவ்வாறு வருகின்ற பந்தினை பந்தடித்தாடுபவர் அடித்தாடாமல் இருந்து விடுகிறபொழுது, நடுவர் அதனைபந்து (Bal) என்று கணக்கிடுவார்.