பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 விளையாட்டுக்களின் விதிகள் >

விடக்கூடாது அல்லது முன்நோக்கி வரும் கையின் திசையினை Longbl6stl_6lqub Bal–mgil (Reverse Motion).

4. பந்தெறிபவர் பின்புறம் வீசி எறிவதற்காக ஒருமுறைக்குமேல் கையைக் கொண்டு செல்லக்கூடாது. பந்தை எறிவதற்கு முன், பந்தெறிபவர் தன் கையை உடலின் பின்புறத்திற்குக் (Rear) கொண்டு செல்லலாம்.

5. காலை முன்புறம் ஓரடி (Step) எடுத்து வைக்கும் பொழுதே, பந்தையும் முன்னோக்கி எறிந்திருக்க வேண்டும். காலை எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை பந்தைப் பின்புறமாகக் கொண்டு சென்று (கைவீச்சைத் தொடர்தல்) எறிய முயலக் கூடாது. அது தவறான எறியாகும்.

5. பந்தெறிபவர் கவனத்திற்கு

1. பந்தடித்தாடுபவர் பந்தை அடித்து விடுவதிலிருந்து தடுக்க வேண்டும் என்பதற்காக, பந்தெறிபவர் வேண்டுமென்றே பந்தை மெதுவாகப் போடுவதோ (Drop) , தரையில் உருட்டுவதோ (Roll) அல்லது தரையில் துள்ளவிடுவதோ (Bounce) கூடாது.

2. ஆட்ட நேரத்தில் எந்த சமயத்திலும் பந்தெறிபவர் தன் பந்தெறியும் கைக்கு அல்லது விரலுக்கு சுற்றுகிற நாடா (Tape) அல்லது எந்தப் பொருளையோ அதுபோன்று பயன்படுத்தக்கூடாது. அதுபோலவே பந்தின் மேல் நாடாவை ஒட்டவோ, சுற்றிவைக்கவோ கூடாது.

3. நடுவரின் மேற்பார்வையின் கீழ், கையை ஈரப்பசையிலிருந்து போக்கிக் கொள்ள, ரோசின் (Rosin) என்ற பவுடரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். -

4. கையிலே கங்கணம் கட்டியிருப்பதுபோல, பந்தெறிபவர் தனது பந்தெறியும் முன் கையில் வியர்வையைத் தடுக்கும் கட்டோ அல்லது காப்பு போன்ற பொருளையோ அல்லது அதுபோன்ற அமைப்புள்ள வேறு எவற்றையும் அணிந்து கொள்ளக் கூடாது.

தவறும் தண்டனையும்

GDG கூறியவற்றில் ஏதேனும் ஒரு தவறினைப் பந்தெறிபவர்

இழைத்துவிட்டாலும், அது முறையிலா பந்தெறி என்றே (illegal pitch) குற்றம் சாட்டப்படும்.

உடனே பந்து நிலைப் i. பந்தடித்தாடுபவருக்கு ஒரு பந்து (Ball) என்று கணக்கிடப்படும். தள ஓட்டக்காரர்கள் ஒரு