பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 301

10. தளங்களுக்கு இடையே ஓடுதல் (Base Runnings) 1. தள ஒட்டக்காரர்கள் சரியான முறையில் தளத்தைத் தொடுதல் - - -

1.தளஒட்டக்காரர்கள் சரியான முறையில் தளங்களைத் தொட்டு

விட்டுத்தான் ஓடவேண்டும். அதாவது முதலாவது, இரண்டாவது,

மூன்றாவது, நான்காவதான பந்தடித்தாடும் தளம் ஆகிய நான்கினையும் மிதித்துவிட்டுத்தான் ஓடவேண்டும்.

2. ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தள ஒட்டக்காரர், முன்பிருந்த தளத்திற்குத் திரும்பி வர வேண்டும் என்றால், முன்போலவே, அந்தந்த தளத்தை மிதித்தவாறு தான் Glgoso (36.16&IGuo (Reverse order).

குறிப்பு: அவர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லும்போது பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தள ஓட்டக்காரர் தொடப்பட்டால் ஆட்டமிழப்பார் என்ற நிபந்தனைக்குள்ளாகியே ஒடிட வேண்டும். - -

3. ஒரு தள ஓட்டக்காரர்தொடப்பட்டு ஆட்டமிழக்காதவாறு ஒரு தளத்தைத் தொட்டுவிட்டு அந்தத் தளத்தில் நிற்கும் உரிமை பெற்றுவிட்டாரென்றால், அடுத்த தளத்திற்குச் சென்று அதைத் தொடும்வரை அல்லது தன்னைத் தொடர்ந்து பின்வரும் தன் குழுத் தள ஓட்டக்காரருக்குத்தன்தளத்தைக் கட்டாயம் விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்ற தருணம் வரும் வரை, அந்தத்தளத்திலேயே இருந்து ஆடலாம். -

4. தளத்திற்கிடையே ஓடுகின்ற தள ஓட்டக்காரர், தளத்தின் உரிய இடத்திலிருந்து அதனைத் தள்ளி அப்புறப்படுத்தி விடுகிறபொழுது, அவரும் அல்லது அவரைத் தொடர்ந்து ஓடி வருகின்ற ஒட்டக் காரர்களும் தளம் நோக்கியே ஒட வேண்டியிருப்பதால், அவர்கள் காரணமின்றியே, நிலைமாறிப் போக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகின்றார்கள்.

குறிப்பு: (2-3-க்குரியது).அது ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்பட்டு, தொடப்பட்டால் ஆட்டமிழந்திடலாம் என்ற நிலையினில், தள ஓட்டக்காரர்கள் தளம் நோக்கி முன்னேறி ஓடலாம். 5. ஒரு தள ஓட்டக்காரர் முன்னோக்கியே தளம் மாறி ஓட வேண்டும். அப்படியின்றி பின்னோக்கி அதாவது வந்த தளத்திற்கே

-