பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 விளையாட்டுக்களின் விதிகள்

9. தள ஓட்டக்காரர் தடுத்தாடுபவரின் ஆட்டத்திற்குத் தடையேற்படுத்தினால், அவர் வெளியேற்றப்படுவார். அப்படி ஏற்பட்டத்தடையானது, தந்திரமான இருமுறை ஆடும் (Double:Play) ஆட்டம் என ஆட முடியாமல் செய்யத்தான் என்று நடுவர் தீர்மானித்தால், அடுத்து தொடர்ந்து வரும் தள ஓட்டக்காரரையும் சேர்த்து வெளியேற்றிவிடுவார். * -

10. சரியாக அடிக்கப்பட்டப் பந்தானது தடுத்தாடுபவர் தொடு முன்போ அல்லது அவர்களைத் தாண்டும் முன்போ தளத்திற்கு அப்பால் நிற்கும் தள ஓட்டக்காரர் மேல் பட்டால்; + =

11. உள்ளே நின்று தடுத்தாடுபவர் தவறவிட்டப் பந்தை, வேண்டுமென்றே உதைத்துத் தள்ளினால், i.

12. தள ஓட்டக்காரர் மூன்றாம் தளத்திலிருக்கும்போது அடித்தாடுபவர் பந்தடித்தாடும் தள இடத்தின் (Home Plate) விளையாட்டில் குறுக்கிட்டால், அம்முறையில் இரண்டு பேருக்கும் குறையும் ஆட்டக்காரர் வெளியேற்றப்பட்டிருந்தால், -

13. தள ஓட்டக்காரரை தளத்திற்குத் திரும்பும் போது அல்லது அதைவிட்டு ஓடும்போது பயிற்சியாளர் (Coach), அவரைத் தொட்டோ, பிடித்தோ உதவியதாக நடுவர் நினைத்தால்,

14. அடித்த அல்லது வீசிய பந்தை எடுக்க ஓடுகின்ற தடுத்தாடுபவரின் ஆட்டத்திற்குக் குறுக்கே தடையாக, மூன்றாம் தளத்தினருகில் நிற்கும் பயிற்சியாளர் பந்தடித்தாடும் தளத்தினருகில் நிற்கும் பயிற்சியாளர் பந்தடித்தாடும் தளத்தை நோக்கி ஓடிப்போனால், மூன்றாம் தளத்திற்கு அருகில் நிற்கும் தள ஓட்டக்காரர்வெளியேற்றப் படுவார்.

15. ஒரு தள ஓட்டக்காரர் முன்னேறும் தளத்திற்கு அருகிலோ அல்லது சுற்றியோ அடித்தாடும் குழுவைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக கூடித்தடுத்தாடுபவர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கினால்,

16. தள ஓட்டக்காரர் - (தலைகீழாக) அதாவது மூன்றாம் தளத்திலிருந்து2-ஆம் தளம் நோக்கி என்பதாக தளங்களுக்கிடையே ஓடினால், - o

17. பயிற்சியாளர் வேண்டுமென்றே, வீசிய பந்தின் குறுக்கே தடையாக இருந்தால்,

தண்டனை: பந்து நிலைப் பந்தாகும். அடித்தாடியவர் தள ஒட்டக்காரர் ஆனால் தவிர, மற்ற யாரும் எந்தத் தளங்களுக் கிடையேயும் ஓடவேண்டாம். -