பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 விளையாட்டுக்களின் விதிகள் *E,

- வெளியேற்றப்படாமல் அவர் அடுத்த தளத்திற்கு முன்னேற அனுமதிக்கப்படுவார். - *

9. ஓடுபவர் ஒருவர் தளம் நோக்கி முன்னேற ஆரம்பித்த பின்னர், அவர் ஓட்டத்தை, எறிபவர் பந்தைக் கையில் வைத்துக் கொண்டோ அல்லது பந்தெறிக்கட்டத்தின் மீது சென்று நின்று கொண்டோ தடை செய்ய முடியாது.

10. அடிபட்டுப் பறந்துபோகும் பந்தைத் தடுத்தாடுபவர்தொடும் வரையில் நின்று, தன் தளத்தில் நிற்கும் ஒட்டக்காரர் அதன்பின் முன்னேறினால், . . .

11. தள ஓட்டக்காரர் சறுக்கி சரிந்து வீழ்ந்து (Siding) தளத்தை அடையும்போது தளம் நகர்ந்து சென்றால், தளமும் ஒட்டக்காரருடன் சென்றதாகக் கருதப்படும். -

தண்டனை தள ஓட்டக்காரர் பாதுகாப்பாக அடைந்த நிலையில் தளத்தைத் தாண்டிச் சென்றதற்காக வெளியேற்றப்பட மாட்டார். தளம் சரியாக இடப்பட்டவுடன் அவர் திரும்பவும் தளத்தைவிட்டு வெளியேற்றும் வாய்ப்பில்லாமல் வந்தடையலாம். தள ஓட்டக்காரர்தளம் திரும்ப முன்னிருந்த இடத்தில் இடப்படு முன் முன்னேற முயற்சித்தால், இந்தத் தகுதியை அவர் இழக்க நேரிடும். 11. பந்து நிலைப்பந்தானது; பந்து ஆட்டத்தில் இல்லை

எனும் சூழ்நிலை அமையும் நிலைமைகள் 1. பந்து நிலைப்பந்தாகும். பந்து ஆட்டத்தில் இல்லை என்று கீழ்க்காணும் சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும்.

2. பந்து தவறான முறையில் அடிக்கப்பட்டபோது: 3. பந்தை வீசுபவர் வீசுவதற்குத் தயாராகயிருக்கும் போது, அடித்தாடுபவர் ஒருகட்டத்திலிருந்து அடுத்தகட்டத்திற்குத்தாண்டிப் போனால், -

4. பந்தை தவறான முறையில் வீசியெறிந்தபோது: 5. தவறான வீச்சு அல்லது தவறான பந்தெறி என்று நடுவர் அழைத்தபோது:

6. கட்டத்திற்குள் நிற்கும் அடிப்பவரின் மீதோ அல்லது அவரது ஆடையின் மீதோ, வீசிய பந்தானது படும்போது;

7. தவறான பந்தைப் (Foul Ball) பிடிக்காமல் விட்டபோது:

3. தளத்தைவிட்டுப் பந்து வீசுவதற்கு முன்னரே வெளியேறிய தற்காக வெளியேற்றப்பட்டபோது;