பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - - 321

3.7 மீட்டர் பரப்பில் எறிபவரைத் தவிர அனைவரும் தனி எறி கோட்டிற்கும் இலக்கு பரப்பு கோட்டிற்கும் இடையில் நிற்கக் கூடாது. 4. தடுத்தாடும் குழுவினர் தனி எறி கோட்டிற்கு வெளியே பந்திலிருந்து 3 மீட்டர் தூரத்தில் நிற்க வேண்டும்.

5. இலக்குக் காப்பாளர் 4 மீட்டர் தடைகோட்டிற்குப் பின்னால் நிற்க வேண்டும். - -

6.7 மீட்டர் எறிதலில் தவறிழைக்கும் குழுவினருக்கு எதிராக எதிர்க்குழுவிற்கு தனி எறி வழங்கப்படும். தடுத்தாடும் குழு தவறிழைத்து, பந்து இலக்கினுள் சென்றால் வெற்றி எண் வழங்கப்படும். -

8. தனி எறி (Free Throw) வழங்கும் முறைகள் தவறு நடந்த இடத்திலிருந்துதான் தனி எறி எடுக்கப்பட வேண்டும். தனி எறி எடுக்கும் சமயத்தில் எதிர்க்குழுவினர் பந்திலிருந்து 3 மீட்டர் தூரத்தில் நிற்க வேண்டும். பந்தை எறிந்த ஆட்டக்காரர் தொடர்ந்து இரண்டாம் முறையாகப் பந்தை கையாளக் கூடாது. -- - 1. எதிர்க்குழு ஆட்டக்காரரைதடுப்பதில் ஆபத்தான முறையை கையாளுதல்.

2. பந்தை வேண்டுமென்றே எல்லைக் கோட்டிற்கு வெளியே அனுப்புதல். -

3. பந்தை ஒருவருக்கொருவர் வழங்குவதில் ஏற்படும் தவறுகள். 4. தவறுதலாக மாற்றாட்டக்காரரை இறக்குதல். 5. உள் எறிதலில் தவறு செய்தல் 6.7 மீட்டர் எறிதலில் தவறு செய்தல் - 7. ஆட்டக்காரர் தனது இலக்குப் பரப்பினுள் செல்லுதல். 9. சமநிலைத் தேர்வு. ஆட்ட நேர முடிவில் எந்த அணி அதிக வெற்றி எண்ணைப் பெறுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆட்டத்தில் சமநிலை நிலவினால் கூடுதல் நேரமாக 5-5 நிமிடம் கொடுக்கப்படும். அப்பொழுதும் வெற்றி தோல்வி இழுபறி நிலை நீடித்தால் சமநிலை தீரும் வரை 5-5 நிமிடமாக ஆட்டம் நீடிக்க வேண்டும்.