பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 - - விளையாட்டுக்களின் விதிகள்

அடித்தெறிதல் . . .

பந்தை அடித்தெறிந்து வழங்குபவர், தனது ஆடுகளப் பகுதிக்குள்ளே நடுக்கோடு, அடித்தெறியும் எல்லைக்கோடு முதலிய எதையும் மிதிக்காமல் உள்ளிருந்தபடியே அடித்தெறிய வேண்டும். எதிராட்டக்காரர் ஆடத் தயாராக இருக்கும்போதுதான் சர்வீஸ் போட வேண்டும்.அதுவும் இடுப்பிற்குக் கீழாக வைத்துத்தான் சர்வீஸ் போட

2. முக்கியமான விதிகள்

3. சர்வீஸ் முறைகள் 1.இறகுப் பந்தை வலை ஓரமாகப் போவதுபோல அடித்து சர்வீஸ் எல்லைக்கோட்டருகே விழுவதுபோல போடுகிற Short service.

2. எல்லைக்கோட்டருகே துரமாகப் போய் விழுமாறு உயரமாகப் GLIGold High service.

3. எதிராட்டக்காரர் ஏமாந்து இடம் பெயர்ந்து தடுமாறி ஆடுவது போல் ஏமாற்றிப் போடுகிற Flick service,

4. வலை ஓரமாகக் கடந்து முன்புறம் விழுவது போலச் சென்று எல்லைக்கோட்டருகே தூரமாகப் போய் விழுகிற Driveservice என நான்கு வகைகள் உண்டு.

இறகுப் பந்தை எடுத்தாடுதல் --

சர்வீஸ் பந்தை எடுத்தாடஇருப்பவர், தனது முன்காலை சர்வீஸ்

கோட்டருகில் (3 அடி தூரத்தில்) வைத்து முன்புறம் சற்று குனிந்து தயாராக இருக்க வேண்டும்.

4. அடித்தாடும் முறைகள் (Strokes)

1. பந்தை உயரமாகப் போவதுபோல் அடித்து, கடைக் கோட்டருகே சென்று விழச் செய்வதற்கு clear shot என்று பெயர். எதிராளியைப் பின்னால் போகச் செய்து தன் நிலையைத் திறமாக இருக்கச் செய்ய இந்த ஆட்டமுறை உதவுகிறது.

2. எதிராளி அனுப்புகிற பந்தை சரியாக அடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்து அதிக வெற்றி எண்களைப் பெற உதவும் இம்முறைக்கு Smash என்று பெயர்.