பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 விளையாட்டுக்களின் விதிகள்

தன் கணுக்காலுக்குக் கீழே உள்ள பகுதியால் கால்களை

பக்கவாட்டில் உயர்த்தி, எதிரியைத் தொடுதல்.

சமநிலை இழக்காமல் நின்றுகொண்டு கைகளைப் பக்கவாட்டில் தொங்கவிட்டு வைத்திருக்கவேண்டும். எதிர்பாராத சமயத்தில் இடது காலைத் தரையில் ஊன்றி, உடல் எடையைத் தாங்கி, உடலை இடது பக்கமாகச் சாய்த்து, வலது காலை உயர்த்தி, முழுமையாக நீட்டி வலது பாதத்தால் எதிராளியைத் தொடவேண்டும். =

தாக்கும் பகுதிகள்

மேலுடல் (Trunk), முகம் (Face) ஆகிய பகுதிகளில் கை முட்டி மற்றும் கால் பாதத்தால் தொட வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. - - = “

எல்லையும் தடையும் - - -

எல்லைக்கோட்டிற்கு வெளியில் சென்று ஆட அனுமதி இல்லை. மேலும், எதிராளிக்கு முதுகைக் காட்டுதல் எதிரியைப்

பிடித்துத் தள்ளுதல், இடுப்பிற்குக் கீழ் அடித்தல், கீழே விழுதல் முதலிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. * - இத்தகைய தவறுகள் ‘கியாங்கோ (Kyong-go warning) என்று அழைக்கப்படுகிறது.

அதைப்போலவே தாக்குதலைத்தடுக்கும் வீரர் எதிரியின் தாக்கும் கால்களைப் பிடித்தல், எதிரியைத்தள்ளுதல், மனம் அறிந்து எதிரியின் முகத்தில் தாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது. தவறு என்று குறிக்கப்படும்.

இத்தகைய தவறுகளை செய்பவர்களுக்கு 1 புள்ளி

குறைக்கப்படும்.

வெற்றிப் புள்ளிகள் - -

மேல் உடலில் தாக்குதலுக்கு 1 வெற்றிப் புள்ளி உண்டு. முகத்தில் தாக்கினால் 2 வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

மூன்று சுற்றுகளில் அதிக வெற்றிப் புள்ளி பெறுபவர் வெற் பெற்றதாக நடுவரால் அறிவிக்கப்படுவார். -

போட்டி துவங்கும் முறை - *

போட்டியில் தயாராக உள்ள இரண்டு வீரர்களும் ஒருவரை

ஒருவர் நேராகப் பார்த்து நிற்க வேண்டும். நடுவர் சா-ரியாட் என்றும், umi-soo (CHA-RYEOT =ATTENTION), (KYEONG-RYE = BOW)