பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வரலாறு

1860 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் குத்துச்சண்டையின் விதிமுறைகள் தொகுக்கப்பட்டன. 1904-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 1931-ஆம் ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டது. குத்துச்சண்டை 1949-இல் இந்திய குத்துச்சண்டைக் கழகம் உருவானது.

ஆபத்து விளைவிக்கக்கூடிய விளையாட்டாக குத்துச்சண்டை கருதப்பட்டாலும், உடற் தகுதியை வளர்க்கவும், தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் முதலிய வேறு குணங்கள் வளரவும் குத்துச் சண்டைப் பயிற்சி வழிகாட்டுகிறது.

மேடை

7 மீட்டர் நீளமுள்ள பலகைகளால் அமைக்கப்படும் குத்துச்சண்டையிடும் மேடையின் நீளம், அகலம் 6.10 மீட்டர் என்று சம அளவுள்ள நான்கு பக்கங்களைக் கொண்டதாக சதுர வடிவமாக இருக்கும்.91சென்டிமீட்டருக்குக் குறையாமலும், 122 மீட்டருக்கு அதிகமாகாமலும் உயரம் இருக்க வேண்டும்.

மேடையின் நான்கு மூலைகளிலும் 2.67 மீட்டர் உயரமுள்ள கம்பங்கள் பொருத்தப்பட வேண்டும். தரைப்பகுதி அதாவது சண்டையிடும் பலகை 1.3 சென்டிமீட்டர் முதல் 1.9 சென்டிமீட்டர் கனமுடைய ரப்பர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரப்பருக்கு இணையான பொருளைக் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். அதன் மீது கேன்வாஸ் உறையைக் கொண்டு பக்கவாட்டில் சேர்த்துப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். -

மேடையைச் சுற்றியுள்ள நான்கு கம்பங்களையும் இணைத்து நான்கு கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். தலைமை நடுவருக்கு இடதுபுறம் உள்ள மூலையில் சிகப்பு வண்ண அட்டையும், எதிர் மூலையில் நீலநிற அட்டையும் கட்டப்பட்டு, போட்டியாளர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டிருக்கும். மற்ற இரு மூலைகளிலும் வெள்ளைநிறப்பைகள் கட்டப்பட்டிருக்கும். கையுறை

சண்டையிடப் பயன்படுத்தப்படும் கையுறை 284 கிராம் எடை கொண்டது. -