பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

ஆனந்தமாகவும் நீந்த மனிதன் பிற்காலத்தில் புதிய புதிய முறைகளைக் கண்டுணர்ந்து தேர்ந்து கொண்டான். -

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிரேக்கர்கள், பெரும் நீச்சல்காரர்களாகவே வாழ்ந்து சென்றிருக்கின்றனர். -

‘நீச்சல் தெரியாதவன் கல்லாத மூடனைப் போன்றவன் என்று தத்துவஞானி பிளேட்டோ கூறுகிறார் என்றால், அவர்கள் - வாழ்க்கையில் நீச்சலை எப்படி ரசித்து லயித்திருக்க வேண்டும்.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் போர் வீரர்களாகவே தங்கள் வாழ்க்கையினைத் தொடங்கினர். ஆகவே, போர் வீரர்கள் அனைவரும், நீச்சலில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயப் பயிற்சிக்கும் ஆட்படுத்தப்பட்டிருந்தனர். -

கிரேக்க இளைஞர்களை, பனி நிறைந்த காலைப் போதில் நிர்வாணமாக ஆற்றில் நீந்தவிட்டு அவர்களின் உடல் திண்மையை, மனவண்மையைப் பரிசோதித்தவரலாற்றுக்குறிப்புக்களும் உண்டு. சிறந்த வீரர்களை உருவாக்கும் உன்னத முயற்சிக்கு, நீச்சல் விளையாட்டும் நிறைந்த பயனை அளித்திருக்கின்றது.

ரோம் சாம்ராஜ்யத்தின் பேரரசனாகத் திகழ்ந்த ஜூலியஸ் சிறந்த நீச்சல் வீரர் என்று சரித்திரம் சொல்கிறது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழிதானே! -

பாரத நாட்டின் பண்பாட்டின் அடிப்படையாக மதம் அமைந்திருக்கின்றது என்பர். அத்தகைய அருமையான மதச்சடங்கில் ஈடுபடுவதற்கு முன், நீராடித் தொடங்குவது புனிதமானது என்ற கொள்கையே அந்நாள் தொட்டு இந்நாள் வரை தொடர்கிறது.

மொகஞ்சதாரோ, ஹரப்பாபோன்ற இடங்களில் புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர்களால் அகழ்ந்தெடுத்துக் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறிப்புகளில், திராவிடர்கள் நீச்சலில் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆரிய நாகரிகத்திலும் இதன் வழிச் சிறப்பு இன்னும் மிகுதியாகத் தொடர்ந்திருக்கிறது. -

எல்லா நாடுகளிலும் நீச்சல் (விளையாட்டு) இருந்திருக்கிறது. ஆனால் எங்கே தோன்றியது என்பதுதான் யாருக்கும் தெரியாது. நிலவுலகைவிட நீருலகம்தானே மிகுதி. நீருக்கும் மனிதவாழ்வுக்கும் நிறைய தொடர்பு இருப்பதும் ஒரு காரணமே!

இத்தகைய அரிய நீச்சல் விளையாட்டு ஐரோப்பாவில் ஒரு புதிய புரட்சியையே உண்டு பண்ணியிருக்கிறது. சான்றோர்கள்