பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 341

நம்முடைய இந்தியத் திருநாடு மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டிருந்தாலும், பல்வேறு வளங்களைப் பெற்றிருந்தாலும் முக்கியமான தொழிலாக விவசாயமே மேற்கொள்ளப்படுகிறது. நீர் வளம் அதிகமாக இருப்பதும் நமக்கு சாதகமான ஒன்று. நீர்நிலைகள் என்று சொல்லும்போது ஆறு, குளங்கள், ஏரிகள், கிணறுகள் மூலமே விவசாயம் நடைபெற்று வருகிறது.

மக்களின் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் தண்ணி இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. தண்ணில் பல்வேறு விளையாட்டுக்கள் வில் |ள்யாடப்பட்டு வந்தாலும் எல்லா

o - i. * * . ... so - * - - - விளையாட்டுக்களுக்கும் அடிப்படைத் திறனாக அமைவது நீச்சல்.

தற்காப் புக்காகவும், க்கு உதவுவதற்காகவும் உடலை நல்ல துக் கொள்ளவும் நீச்சல் பெரிதும்

o

-- *

-

-

ஆரோக்கியத்துடன்

o

- *

- . -

o: “o o: o உதவுகிறது * ன்ை நீந்த வேண்டும்?

oxo -

மனிதன் பிறக்கும்போதே பல்வேறு ஆற்றல்களைப் பெறுகிறான். அவரவர் திறமைக்கேற்ப, வசதிக்கேற்ப கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கேற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். எது எப்படி இருந்தாலும் நாம் வாழவும், சாதனை புரியவும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், பல்வேறு கலைகளைக் கற்றுக் கொள்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் நீச்சல் கலை.

விளையாட்டுக்கள் பல இருந்தாலும் அவைகளைக் கற்றுக் கொள்ளும்போது பல்வேறு உபகரணங்கள் தேவைப்படுகின்றன. வசதி உள்ளவர்கள் உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்து கின்றனர். நீச்சல் விளையாட்டைப் பொறுத்தவரை பணம் செலவு செய்யாமல் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கலையாகும். அந்த அற்புதக் கலையை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தற்காப்புக் கலை என்றே சொல்லலாம்.

எங்கள் ஊரில் ஆறு, குளம், ஏரி என்று எதுவும் கிடையாது, நாங்கள் எப்படி நீச்சலைக் கற்றுக் கொள்வது என்று கேட்போருக் காகவே எல்லா நகரங்களிலும் நீச்சல் குளங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன.

நீந்தக்கற்றுக் கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன், நீச்சல் பந்தயத்திற்குப்போகவா போகிறேன் என்று கேட்கத் தோன்றுகிறதா?

உங்கள் கேள்வி நியாயமானதுதான். நீங்கள் நீச்சல் வீரனாகா