பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 விளையாட்டுக்களின் விதிகள்

விட்டாலும் பரவாயில்லை. நீச்சல் சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. உங்கள் உடலை கட்டழகுடன் வைத்திருப்பதுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வழி வகுக்கிறது. - .

அதுமட்டுமல்ல, மழைக்காலங்களில் புயல் சீற்றங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போதும், அவசர காலங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், பிறருக்கு உதவி செய்யவும், பிற உயிர்களைக் காப்பாற்றவும் நீச்சல் கற்றுக் கொள்வது நல்லது. யார் நீந்துவது? - -

நீச்சல் க்றறுக்கொள்ள வயது வரம்பே கிடையாது. மேலை நாடுகளில் எல்லாம் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை களுக்குக்கூட சிறிய தண்ணி தொட்டிகளின் மூலம் நீந்துவதற்குப் பயிற்சி அளிப்பதாக நாம் அறிகிறோம்.

ஆகவே, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். நீந்தக் கற்றுக் கொள்ளலாம்.

நீரில் மூழ்கி நீந்தும்போதும், மூச்சை அடக்கி வைத்துக் கொள்கின்ற ஆற்றல் இருக்க வேண்டும் என்பது நாம் அறிய வேண்டிய முக்கிய தகவல் ஆகும்.

பழகும் முன் ஒரு கதை

உங்களையெல்லாம் உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக

கதை எனக் குறிப்பிட்டாலும், உண்மையில் அது ஒரு வரலாறு.

நிச்சயம் நாம் அறிய வேண்டிய செய்தி.

நம்முடைய இந்தியத் திருநாட்டினை ஆட்சி செய்த பிரதம மந்திரிகளில் முக்கியமானவர் லால்பகதூர் சாஸ்திரியும் ஒருவர். சாஸ்திரி அவர்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருக்கும்பொழுது கங்கை ஆற்றைக் கடந்து சென்றாக வேண்டும், படகிலே சென்று ஆற்றைக் கடக்க படகுக்காரனுக்குக் கட்டணம் செலுத்த அவரிடம் காசு இல்லை. -

கங்கையின் வேகத்தையும், எதிர்த்து வீரமுடன் நீந்தி ஆற்றைக் கடந்து சென்றார் என்பது வரலாறு. பின்னாளில் நமது பாரத பிரதமராகி, ஒரு மாபெரும் தலைவராகப் பேசப்படும் லால்பகதூர் சாஸ்திரியின் புகழ் உலகம் உள்ளளவும் பேசப்படும். லால்பகதூர் சாஸ்திரி சிறிய வயதில் அஞ்சாநெஞ்சனாக அவர் திகழ்ந்ததாலே நாட்டு மக்களால் புகழப்படுகிறார்; போற்றப்படுகிறார். நீச்சல் அவரது வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டது பார்த்தீர்களா!