பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 343

லால்பகதூர் சாஸ்திரி அவர்களைப் போலவே மாவீரன் என்ற

பெயரோடு வாழ்ந்த மாவீரன் நெப்போலியன், எலினா என்ற தீவிலிருந்து நீந்தி பிரான்ஸ் நாட்டிற்கு வந்தார். அவரைக் கண்டு வியந்த அனைவரும், “உங்களால் எப்படி கடலில் நீந்த முடிந்தது?” என்று கேட்டபோது, “நான் எங்கே நீந்தினேன். என்னுடைய இலட்சியமல்லவா என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தது” என்று

பார்த்தீர்களா, நெஞ்சிலேதுணிவும், நாம் நீந்த வேண்டும் என்ற இலட்சியமும் நமக்கு இருந்து, நம்பிக்கையோடு நீந்த கற்றுக் கொண்டால் நிச்சயம் நீங்களும் ஒரு நீச்சல் வீரராகலாம் என்பதற்காக இன்னும் ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குத் தர விரும்புகிறோம்.

மைக்பர்டர் என்னும் அமெரிக்கர், விபத்து ஒன்றில் அவரது

கால்கன் இரண்i டும் பலமாக அடிபட்டுவிட்டது. செயலிழந்த

கால்களோடு நீங்கள் நீந்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் .

அறிவுறுத்துகிறார்கள். - *

மைக்பர்டர் 8 வருடங்கள் தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்தார்.

அவருடைய விடாமுயற்சிக்கும், பயிற்சிக்கும் பலன் கிடைத்தது.

கடவுள்மைக்பர்டர்மீது கருணை மழைபொழிந்தார்.செயலிழந்த

கால்கள் வலுப்பெற்றன. மகிழ்ச்சியோடு பயிற்சி பெற்ற மைக்பர்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு தேர்ச்சி பெற்றார். 1968-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்றதோடு,

1968-ஆம் ஆண்டே உலகக் கோப்பை தனிநபர் பரிசையும் வென்று வெற்றிவாகை சூடினார். மைக்பர்டரின் மனவலிமையைப்

பார்த்தீர்களா?

நீங்களும் நீந்த வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டதா, வாருங்கள் மேலும் தொடர்வோம். * - நீந்துவதால் பயன் என்ன? -

நீங்கள் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு முன்னர் நீச்சல் கற்றுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பயன்களைப் பாருங்கள். - ... - நீச்சல் பயிற்சிகள் தசைகளில் விசை ஏற்றி வலிமையுடன் -

உடலை நெகிழும் தன்மையுடையதாக மாற்றுகிறது. இதயத்தின் தன்மை அதிகரிக்கிறது. எல்லா வயதினரையும் உற்சாகப்படுத்தும்