பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 விளையாட்டுக்களின் விதிகள்

சிறந்த பயிற்சியே நீச்சல் ஆகும். சிறந்த பலன்களை அளிக்கும் மூன்று

வகை பயன்கள் உள்ளன.

1.தண்ணில் சாதாரணமாக நின்றுகொண்டு இருக்கும்பொழுது தண்ணின் அழுத்தத்தால் இதயத்தை உற்சாகப்படுத்தி, உடல் முழுதும் இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து ஓடுவதற்கு ஏற்றவாறு பலம் தருகிறது. - -

தண்ணிருக்குள் நீந்தி பயிற்சி செய்யும்போது உடல் முழுதும் இரத்தஓட்டம்பாய்ந்து செல்லும் பணியைச் செய்யும் இதயத்திற்குத் துணையாக இப்பயிற்சி உதவுகிறது. - -

2. நீச்சல் பயிற்சிகள் ஒரு சீரான இயக்கங்களாக இருப்பதால், உடல் இயக்கங்களை அளிக்கின்ற உடற்பயிற்சியாக இருந்து இரத்த ஓட்டம் சம்மந்தமான நோய்களைக் குணப்படுத்தும் வல்லமையை நீச்சல் பயிற்சிகள் அளிக்கின்றன. -

இரத்தக் குழாய் தடித்தல், இரத்தம் தேக்க நிலையில் ஓடுதல், திடீர் தாக்குதல்களுக்கு(strokes) உடல் ஆளாகும் போது அந்த நோயை குணப்படுத்தும் ஆற்றலை உடல் பெறுவதாக வல்லுநர்கள் கூறுகின்றார்கள். - 3. நீச்சல் பயிற்சிகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவையாகும். ஆண், பெண் அனைவரும் வயது வித்தியாசமின்றி பங்கு பெற்று மகிழும் பயிற்சியாகும். -

நீச்சல் பயிற்சிகள் உடல்நலத்தை மட்டுமல்லாது உறுதியான உடல் அமைப்பைத் தருகிறது. தண்ணிரில் நீந்துபவர்கள் மட்டுமல்ல, தண்ணில் நிற்பவர்கள் கூட நிறைய பயன்களைப் பெறுகிறார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக் கிறார்கள்.

இதய நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் பயிற்சிகளால் நோய் நீங்கி வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூட்டுவாத நோய் உள்ளவர்கள் ஆழமான நீர் பரப்பிற்குச் சென்று பயிற்சிகள் செய்யும்போது, அவர்கள் நோய் நீங்கி வாழ்கிறார்கள் எனவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மேலைநாட்டு தம்பதியர், பத்துவாரங்கள் தொடர்ந்து நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டதால், தங்களுக்கு இருந்த நாடித்துடிப்பின்

வேகம் குறைந்து இரத்த அழுத்தம் இயல்பான நிலைக்குத் திரும்பியதாகவும் உடம்பிலிருந்த கொழுப்புச் சத்து குறைந்து