பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

co’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 345

உடலிலுள்ள தசைகள் அழகான அமைப்பில் உருவானதாகவும் கூறி உடல்திறமும் பெற்றதாக கூறுகின்றார்கள். -

4. நீந்துவதற்குரிய இடம் நீங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் குளம் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு பயிற்சிக்கு செல்வது நல்லது. சுகாதாரமில்லாத தண்ணில் நீச்சல் கற்றுக் கொண்டால் பல்வேறு விதமான தோல் சம்மந்தமான நோய்வர வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நீங்கள் பயிற்சி பெறும் இடம் நீச்சல் குளம், ஆறு, ஏரி, குளம், கிணறு முதலிய நீர்நிலைகளில் எதுவாக இருந்தாலும் ஆழமில்லாத பகுதியில் உங்கள் பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

நீந்தக் கற்றுக்கொள்பவர்கள் நீர் நிலையின் கரையோரமாக நின்று பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது நீந்தத் தெரிந்த நபர்களை துணைக்கு வைத்துக் கொண்டு பழகுதல் சாலச்சிறந்த முறையாகும். - - - - - -

நீந்துவதற்கென்றே கட்டப்பட்ட குளமாக இருந்தால், புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்காகவே உரிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். மேலும், போதிய பயிற்சியாளர்களும் உபகரணங்களும் எளிமையாக கிடைக்கும். - - நீந்தும் முறைகள்

நீச்சல் பயிற்சியின்போது எப்படி வேண்டுமானாலும் நீச்சல் பயிற்சி பெறலாம். பயிற்சிக்குப் பின்னர் போட்டிகளில் பங்கு பெற சர்வதேச அளவில் நான்கு முறைகளே பின்பற்றப்படுகின்றன. அவைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். - -

1. தடையில்லா நீச்சல் (Free Style) 2. மல்லாந்து நீந்துதல் (Back Stroke) 3. tomu sso (Breast Stroke) 4. பட்டாம்பூச்சி &#69 (Butterfly Stroke) நீங்கள் நீந்தக் கற்றுக் கொண்டதும் ஒவ்வொரு நீச்சல் முறை பற்றியும் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். -