பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 விளையாட்டுக்களின் விதிகள் =

கால்களை உயரேத் தூக்கும்போது குறைந்தது so செ.மீ. அல்லது 45 செ.மீ. வரை உயரே தூக்கலாம். இந்த பயிற்சியை ஒரு நிமிட நேரம் செய்யவும். * * -

இதேபோல் மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களை மேலும் கீழும் இயக்கி பயிற்சி செய்யவும். . . . - -

சில நாட்கள் இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உடல்நலன் நல்ல ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை இந்தப் பயிற்சியின்போதே நீங்கள் அறிந்து கொள்ளலாம். *.

கை கால்களில் மிகுந்த வலி ஏற்படுதல், தண்ணில் பயிற்சி செய்வதால் ஜூரம் போன்ற உபாதைகள் தொடர்ந்து வந்தால், உங்களை நல்ல மருத்தவரிடம் பரிசோதித்துக்கொண்டு பயிற்சியைத் தொடரலாம். -

பயிற்சி 5 - - -

மூச்சை அடக்கிக் கொண்டு (சில மணித்துளிகள்) தண்ணிருக்குள் மூழ்கி இருக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி இருக்கும் நேரத்தை அதிகரித்துக்கொண்டு பழகலாம். - பயிற்சி 6 -

மார்பளவு தண்ணில் நிற்கவும். மூச்சை அடக்கிக் கொண்டு தண்ணில் முகம் மட்டும் காதுவரை தண்ணில் மூழ்குவதுபோல வைத்துக்கொள்ளவும். கைகள் இரண்டையும் முன்புறமாக காதுகளை ஒட்டியுள்ளபடி நீட்டி வைத்து தண்ணில் படுத்து முன்புறமாக முடிந்தவரை மிதந்து செல்லவும்.

பயிற்சி 7 -

இப்போது, நீங்கள் நின்று கொண்டு செய்த பயிற்சிகளை தண்ணில் மிதந்து கொண்டே செய்ய வேண்டும். -

தண்ணில் குப்புறப்படுத்து கால்களை விறைப்பாக பின்புறம் நீட்டிகைகளை மாற்றி மாற்றி அரைவட்டமடிப்பதுபோல தண்ணில் அடித்துப் பழகவும். -