பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

சுவாசம் -

இந்தப் பயிற்சியின்போது தலையைத் தண்ணிருக்கு மேல் உயர்த்தும்பொழுது மூச்சை உள்ளே இழுத்து, தலையை தண்ணிருக்குள் கவிழ்த்து தண்ணிரைத் தள்ளியவுடன் மூச்சை வெளியே விடவேண்டும்.

7. திட்டமிட்ட பயிற்சியும் பயனும்

நீந்துவதற்குரிய அடிப்படை முறைகளை அறிந்துகொண்ட நீங்கள், எவ்வளவு நேரம் பயிற்சி செய்வது, பயிற்சிக்குச் செல்லும் முன்னர் எப்படி ஆயத்தப்பயிற்சிகளை மேற்கொள்வது என்பதைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். -

முதலில் நீங்கள் பயிலப்போகும் நீச்சல் எந்த வகை என்பதை நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். அதாவது தடையில்லாநீச்சல் (Free Style),மல்லாந்து நீந்துதல் (Back Stroke), பட்டாம்பூச்சி நீச்சல் (Butterfly), மார்பு நீச்சல் (Breast Stroke) என்று நான்கு வகை நீச்சலில், நீங்கள் விருப்பமுடன் எந்த முறையைப் பயில விரும்புகிறீர்கள் எனத் தெளிவாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு

முறைப் பயிற்சிக்கும் தெளிவான படங்களில் விளக்கப்பட்டு உள்ளன

என்பதையும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். ஆயத்தப் பயிற்சி

திடீரென தண்ணில் குதித்து நீந்த ஆரம்பித்தால் கை, கால்கள் இயக்கம் சரியாக இருக்காது என்பதால், உடலைப் பதப்படுத்திட உரிய சில உடற்பயிற்சிகள் செய்து உடலை வெப்பப்படுத்திக் கொள்வது அவசியம். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சிகளை செய்வது நல்லது.

கை மற்றும் கால்களை இயக்கும் பயிற்சிகள் அல்லது குறைந்த எடையுடன் செய்யும் பயிற்சிகள், கயிறு தாண்டிக் குதிப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். எடை அதிகமாக தூக்கிப் பயிற்சிகள் செய்தால் நீந்தும் போது உங்கள் உடல் விரைவில் களைப்பாகி விடும் என்பதால் அதிகமுள்ள எடையை வைத்துப் பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் நீச்சல்கற்றுக்கொள்ளும்போது ஆழம் மிகுந்த பகுதிக்குச் சென்றுவிடாமல் ஆழம் குறைந்த பகுதியில் நீந்தப் பயில்வதுதான்