பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 35

ஆனால் அது நியாயமான, விதிகளுக்கு உட்பட்ட முறையில் அமைந்திருக்க வேண்டும்.

வேண்டுமென்றே உங்களை எதிராளி தடுத்து இடையூறு செய்தாலும், அவருக்கு ஏதேனும் ஊறு விளையும்படி, அவர் செய்தது போலவே, செய்கின்ற உரிமை உங்களுக்குக் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(ஊ) எந்தவிதமான வினாவையும் எழுப்பாது, நடுவரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏளனமாகப் பேசுவதோ அல்லது பாவனையால் கேலி செய்வதோ, அதுவே ஒரு பெரிய குற்றமாகும்.

(எ) இலக்குக் காவலனாக விளையாடுபவர் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். இலக்குப் பரப்பை விட்டு நீங்கள் வெளியே வந்தால், எதிராளி வந்து உங்களை மோதலாம். பந்தைப் பிடிக்காத பொழுதும், எதிராளியைத் தடை செய்யாத பொழுதும், இன்னும் இலக்குப் பரப்பில் நீங்கள் இருக்கும் வரைக்கும் விதிகளினால் பாதுகாக்கப்படுகின்றீர்கள். பிடித்தவுடனே பந்தை உதைத்தோ அல்லது எறிந்தோ தன்னிடம் இருந்து அனுப்பி விடுதல் சிறந்த வழியாகும்.

(ஏ) இலக்குக் காவலன் பந்தைப் பிடித்துக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, எந்த ஆட்டக்காரரும் பந்தை உதைக்க முயற்சிக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிச்செய்தால், அது அபாயம் விளைவிக்கக்கூடிய செயல் என்று நடுவரால் நிச்சயிக்கப்பட்டு, தவறு இழைத்ததற்காக மறைமுகத்தனி உதையைத் தண்டனையாகப் பெறக்கூடும்.

(ஐ) ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அபாயம் நேர்ந்தால் ஒழிய, நடுவரின் அனுமதியின்றி, எந்த ஆட்டக்காரரும் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஒரு ஆட்டக்காரர் ஆடுகளத்தை விட்டு வெளியே செல்ல விரும்பும் பொழுது நடுவரிடம் கூறி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றாலும், ஆட்டத்தில் பந்து விளையாடப்படாத நேரம் பார்த்தே வெளியில் இருந்து உள்ளே நுழைய வேண்டும்.

4. ஒறுநிலையுதை எடுக்கப்படும் பொழுது:

(அ) ஆட்டக்காரர் எல்லோரும் பந்துக்குப்பின்னால்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஒறுநிலைப் பரப்பில் பக்கக் கோட்டிற்கு அருகாமையிலும் நிற்கலாம். அதேநேரத்தில், அங்கு அயலிடவிதியும் பார்க்கப்படுகிறது என்பதையும் நீங்கள் மறந்துவிடக்

கூடாது.