பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 விளையாட்டுக்களின் விதிகள் - ==

9. நடுவரும் - கடமையும் (Judges and their Duties) முதன்மை நடுவர் (Referee) -

எல்லா நடுவர்களுக்கும் தலைமைப் பொறுப்பாக முதன்மை நடுவர் இருப்பார். போட்டிகள் எல்லாம் விதிகளின்படி நடைபெறுகின்றதா என்பதனை இவர் உறுதி செய்வார்.

நீச்சல் போட்டியாளர்களை போட்டியிலிருந்து தகுதியிழக்கச் செய்யும் உரிமை இவருக்கு உண்டு.

போட்டி துவக்குபவர் (Starter)

நீச்சல் வீரர்கள் தாமதமாக வருதல், கீழ்ப்படியாமல் இருத்தல், முக்கிய தவறுகளை இவர் முதன்மை நடுவரிடம் தெரிவிப்பார். எல்லாப் போட்டியாளர்களையும் கவனிக்கும்படி குளத்தின் பக்கவாட்டில் 5 மீட்டர் தூரத்தில் துவக்க விளிம்பிற்கு நேரேநின்று கொள்வார். - -

போட்டிகளைத் துவக்குதலும், சரியான துவக்கம் இல்லை யென்றால் மீண்டும் அப்போட்டியை துவக்குவதும் இவரது கடமைகளாகும். -

போட்டி உதவியாளர் (Clerk of course)

இவர் போட்டி துவங்குவதற்கு முன் போட்டியாளர்களை போட்டிக்குத் தயாராக நிறுத்துவார். திரும்புமிட தலைமைக் கண்காணிப்பாளர் (Chief Inspector of Turns) -

திரும்புவதற்கான கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் செய்கிறார்களா என்பதை உறுதி செய்வார்.

கண்காணிப்பாளர்களிடமிருந்து வரும் அறிக்கைகளை முதன்மை நடுவரிடம் சமர்ப்பிப்பார். திரும்புமிடக் கண்காணிப்பாளர்கள் (Inspectors of Turns)

வீரர்கள் குளத்தின் எதிர்முனையைத் தொட்டுத் திரும்பு கிறார்களா என்பதைக் கண்காணிக்க ஒவ்வொரு நீந்தும் பாதைக்கும்