பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 விளையாட்டுக்களின் விதிகள் >

11. சிறந்த நீச்சல் வீரராகுங்கள் நீந்தக் கற்றுக்கொண்ட நீங்கள் போட்டிகளில் பங்குபெற நினைப்பது இயற்கையே. - - .

நீச்சல் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு முன்னால் உரிய விதிகளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். விதிகளின்படியே பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

உரிய பயிற்சித் திட்டங்களை வகுத்து உங்கள் பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வெற்றியை ஈட்டுங்கள்.

- தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தை நீங்கள்

பயிற்சிக்காக செலவிடுவது அவசியம்.

- பயிற்சியின்போது நீங்கள் நீந்திய முறை, நேரம் முதலியவற்றை அட்டவணையில் குறித்துக்கொண்டு உங்கள் முன்னேற்றத்தை நீங்களே சுய விமர்சனம் செய்து கொள்ளுங்கள். --

உங்களுடைய முழுக் கவனமும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்படுவது அவசியம்.

போட்டியின் புதிய புதிய நுணுக்கங்களை புரிந்துகொண்டு அதன்படி செயல்படவேண்டும். -

தொலைக்காட்சியில் காணும் நீச்சல் போட்டிகளை கண்டு போட்டியாளர்கள் பின்பற்றும் நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். - -

வாய்ப்புக் கிடைக்கும்போது போட்டி நடைபெறும் இடங்களுக்குச் சென்று மற்ற வீரர்களின் நுணுக்கங்களைத் தெரிந்து

கொள்ளவும்.

நீந்தும் முறைகளில் ஏதாவது ஒரு முறையைத் தேர்ந்தெடுத்து அதை முறையாக பயிற்சி செய்ய வேண்டும்.

நீந்தத் தொடங்குதல், எல்லையைத் தொட்டு திரும்புதல் முதலியவற்றை நன்கு புரிந்துகொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபட வேண்டும். -

நீங்கள் கலந்துகொள்ளும் போட்டி எந்த போட்டி என்பதை அதாவது குறைந்த தூரமா அல்லது நீண்ட தூரமா என்பதைத் தெளிவாக முடிவு செய்த பின்னரே பயிற்சி செய்ய வேண்டும்.

நீங்கள் பயிற்சி செய்யும் குளம் சரியான அளவுடைய நீச்சல் குளமாக இருத்தலும் அவசியம்.