பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 . . விளையாட்டுக்களின் விதிகள் -

கடலில் பயிற்சி செய்வதற்கு அனுபவம் வேண்டும். கரைக்கு அருகில் அலைகள் அதிகமாக இருக்கும் என்பதால், கடலுக்குள் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டால் அலைகள் இருக்காது என்று கூறுவார்கள். ஆனால், கடல் வாழ் உயிரினங்களால் ஆபத்து வர வாய்ப்பு இருக்கும். ஆகவே, எச்சரிக்கையோடு எப்போதும் செயல்பட வேண்டும். - -

கடலில் நீந்தும்போது நல்ல துணையுடன், பயிற்சியாளரும் இருப்பது அவசியம். உங்கள் பயிற்சியாளரின் ஆலோசனைப்படியே

பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தனியாகச் சென்

பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது.

வாழ்த்துக்கள்

முறையாக பயிற்சிகளை மேற்கொண்ட நீங்கள் தெளிவான

சிந்தனையோடு கடுமையான, தொடர்ச்சியான முயற்சியுடன் பயிற்சி செய்து சிறந்த நீச்சல் வீரராகவும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களை வாழ்த்துகிறேன். . . . .