பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 39

அசைப்பது நடுவரின் உதவிக்காகவே, எதைப்பற்றியும் இறுதியில் முடிவு எடுக்கக் கூடியவர் நடுவரேயன்றி மற்றவரல்ல.

(ஒ) ஒரு ஆட்டக்காரர் ஆடுகளத்தினுள் இருந்து பந்தை ஆடிக் கொண்டிருக்கும் பொழுதும், இலக்குக் காவலன் உள்ளிருந்து கொண்டே பந்தைப் பிடிக்கும் பொழுதும் ஆடுகளத்திற்கு வெளியே பந்து சென்றிருக்க வாய்ப்பு உண்டு. அதேபோல் ஆடுகளத்திற்கு வெளியே ஒடிக் கொண்டு பந்தை, ஒரு ஆட்டக்காரர் எல்லைக் குள்ளே வைத்து ஆடவும் முடியும்.

3. வெற்றி எண் பெறும் பொழுது:

(அ) இதில் கூடியவரை சிறந்த முடிவு எடுக்கப் பந்து வேகமாக உதைக்கப்பட்டு வரும்பொழுது இலக்குக்கு அருகிலாவது அல்லது முடிந்தால் பக்கக் காட்சியை பெறுமளவுக்காவது அருகில் இருக்க வேண்டும்.

(ஆ) முழங்கால்களுக்கு இடையிலும், கணுக்கால்களுக்கு இடையிலும் தாக்கும் குழுவினரால் பந்து ஏந்தி செல்லப்பட்டு, கடைக்கோட்டைக் கடந்து, இலக்கினுள் சென்றுவிட்டால், அது வெற்றி எண்ணாகும். இதுபோன்ற நேரங்களில், அவர்கள் ஏந்திச் செல்லுதல் (Carrying) என்ற தவறுக்கு ஆளாக மாட்டார்கள்.

(இ) இலக்குக் காவலன் பந்தைப் பிடிக்கும் பொழுதோ அல்லது குத்தி அடிக்கும் பொழுதோ (Fisting out) சில சமயங்களில் பந்தை மேலாக (In the air) இலக்கிற்குள் செல்லுமாறு விட்டுவிடுவதும் உண்டு. அவ்வாறு பந்து கடைக்கோட்டைத் தாண்டிச் சென்று விட்டது என்று உறுதியாக நம்பினால், அதை வெற்றி எண் என்று கூறிவிடலாம்.

(ஈ) தன்னுடைய ஒறுநிலைப் பரப்பிற்கு உள்ளிருந்து கொண்டே இலக்குக் காவலன் எந்தப் பக்கமும் பந்தை எறியலாம். எறிவது என்ற தவறு அவரைச் சாராது.

(உ) கடைக்கோடு-இலக்குக் கம்பங்களுக்கு இடையே உள்ள கடைக்கோடு உள்பட, ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நன்றாகக் கிழித்து அடையாளம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

(ஊ) குறுக்குக் கம்பங்கள் சரியான முறையில் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். 4. அயலிடத்தைக் கண்டுபிடிக்க

(அ) எல்லோரும் அடிக்கடி நினைத்து கொள்வதுபோல, அயலிடம் ஆவதென்பது - அவனே பந்தை விளையாடிக்