பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விளையாட்டுக்களின் விதிகள் .

(எ) பந்தை வைத்திருக்கும் இலக்குக் காவலனை இடிக்கப் படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அவன் பந்தைக் கையில் வைத்திருக்கும்பொழுது, எதிராளி சென்று பந்தை உதைப்பதோ அல்லது உதைக்க முயல்வதோ (இதுபோன்ற சமயங்களில்) கூடாத ஒன்றாகும். இங்கு கால்களைப் பயன்படுத்துவதென்பது அபாய கரமான ஆட்டம் என்று கருதப்படுவதால், சரியாக அத்தவறினைத் தண்டிக்க மறைமுகத் தனியுதை வாய்ப்பை எதிர்க் குழுவினருக்குக் கொடுக்க வேண்டும்.

(ஏ) தடுக்கும் குழுவைச் சேர்ந்த ஒருவன், தன் இலக்குப் பகுதியை நோக்கிக் கொண்டு முகம் திரும்பி நிற்கும் நிலையில், எதிராளியால் ஏமாற்றப்படுகிற பொழுதும், ஏமாற்றப்படுகிற நேரத்தில் வேண்டுமென்றே எதிராளியைத் தடைசெய்யும் பொழுதும், அவன் பின்புறம் இருந்து மெதுவாக இடிக்கப்படலாம். (அகில உலக சபை 8. சூன், 1907)

(ஐ) ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வைத்து எதிராளியை அடிக்கவோ அல்லது உதைக்கவோ செய்து தடுக்கும் குழு ஆட்டக்காரரை ஆடுகளத்தை விட்டு வெளியே அனுப்பிய பிறகும், தண்டனையாக ஒறுநிலை உதையைத் தர நடுவருக்கு அதிகாரம் உண்டு (கவுன்சில் 5, நவம்பர், 1907)

6. தனியுதை எடுக்கும் பொழுது

(அ) தனி உதையில் - பந்து உருண்டோடவோ அல்லது தன் சுற்றளவு முழுவதும் (குறைந்தது 27 அங்குலம்) நகர்ந்தோடியது என்று நடுவர் கருதினால், மறுமுறை ஒழுங்காகப் பந்தை நிலையாக வைத்து உதைக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும்.

(ஆ) உதைக்கப்படுமுன், பந்து நிலைப்பந்தாக இருக்க வேண்டும் என்பதையும் நடுவர் கவனிக்க வேண்டும்.

(இ) முடிந்தவரை தனியுதை உடனே எடுக்கப்படவேண்டும். சான்றாக, ஒரு குழுவினர் பந்தை நேரடியாக உதைத்து இலக்கினுள் செலுத்தி, வெற்றி எண் பெற்றுவிட்டால், வெற்றி எண்ணைத் தவறவிட்டக் குழுவினர் உங்களுடைய தடுப்புமுறைக்கு ஆக்கம் தேடும் நேரத்தைக் கொடுக்க வேண்டும். அதற்காகவே, ஆட்ட நேரத்தைப் பிறர் வீணாக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நேரத்தை வீணாக்குதல் என்பது நியாயமானது அல்ல.

(ஈ) விசில் மூலம் நடுவரின் சைகைக் கிடைத்த பிறகே தனி உதை எடுக்கப்பட வேண்டும்.

(உ) மறைமுகத் தனி உதையோ அல்லது நேர் முகத் தனி உதையோ எதுவாக இருந்தாலும், தனி உதை எடுப்பவர் தன்னுடைய