பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 49

நடுவரே முதன்மையானவர். மற்ற இருவரும், நடுவருக்கு உதவியாய் இருந்து ஆட்டத்தை ஒழுங்குற நடத்திச் செல்லத் துணையாய் இருப்பவர்கள். இவர்களின் பணி மிகவும் பயன்படக் கூடியனவாகும்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னும், நடக்கும்போதும் நடந்து முடிந்த பிறகும் இருக்கும் எல்லா நிர்வாக பணிகளையும் மேற்கொள்ளும் நடுவரை நான்காவது நடுவர் என குறிப்பிடுவர்.

4. பதிவு பெற்ற துணை நடுவர்களின் பணிகள்

(அ) ஆட்டத்திற்கு அவமானம் தரக்கூடிய நிலையில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்து, அவைகளை நடுவர் கவனிக்காத பொழுது, துணை நடுவர்கள் உடனே அவருக்கு அறிவிக்க வேண்டும்.

(ஆ) ஆட்டக்காரர்களின் முரட்டுத்தனமான ஆட்டத்தையும், பண்புகெட்டநடத்தையையும் ஆட்டநேரத்தில் நடுவருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.

(இ) இலக்குக் கம்பங்களுக்கு இடையில், கடைக்கோட்டைத் தாண்டிப் பந்து சென்றதா என்று கேட்கப்படும் பொழுதுதான். அவர்கள் சொல்ல வேண்டும்.

(ஈ) விதிகளை மீறிய செயல் நடப்பதை, நடுவர் கவனிக்க இயலவில்லை என்று தான் கருதினால், நடுவரும் அதை ஒத்துக் கொள்வார் என்று நம்பினால், நடுவரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு வரலாம்.

(உ) துணை நடுவர்கள் ஒவ்வொருவரும் 1 விசிலும், 1 கொடியும், 1 மணிப்பொறியும் (Watch) தன்னுடன் வைத்திருக்க வேண்டும். 5. துணை நடுவர்களின் பணிகள்

(அ) ஆட்டத் தொடக்கத்துக்கு முன்னரே அவர்களை நடுவர் சந்தித்து, அவர்கள் என்ன செய்ய வேண்டும். எவ்வாறு தனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாகச் சொல்லித் தந்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

(ஆ) இரு துணை நடுவர்களும் ஆட்ட நேரத்துக்கு முன்னரே வந்திருந்து நடுவரிடம் குறிப்புகளையும் விதிகளையும் தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். சொந்தக் கருத்து எதுவாக இருந்தாலும் சரி, நடுவரின் முடிவைக் குறித்து, எந்தக் கேள்வி களையும் எழுப்பக் கூடாது. அவரது முடிவு - முடிந்த முடிவாகும்.

(இ) பக்கக்கோட்டுக்கு வெளியே பந்து முழுவதும் கடந்து சென்றுவிட்டால், கொடியை அசைத்துக்காட்டவேண்டும். நடுவரின்