பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 53

மேற்கொள்ள வேண்டும். பொதுவான ஒறுநிலை உதை எடுத்தாடு வதற்கான சூழ்நிலையில், அதற்கான விதிமுறைகளையே மேற்கொள்ள வேண்டும்.

சில புதிய விதிகள்

1. பந்தைப் பிடித்துத் தன் வசமாக்கிக் கொண்ட இலக்குக் காவலன், 6 நொடிகளுக்கு உள்ளாக, பந்தைத் தன்னிடம் இருந்து அனுப்பி விட வேண்டும்.

2. ஒரு குழுவினர் இக்கட்டான சூழ்நிலையில் பந்தைத் தங்கள் இலக்குக் காவலனிடம் தள்ளிவிடுகிறபோது (Minus pass) அந்தப் பந்தை இலக்குக் காவலன் கையால் பிடிக்கக் கூடாது. அதைக் கால்களாலேதான் உதைத்து அனுப்பிவிடவேண்டும்.

3.3 முறை மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ளும் அனுமதி உண்டு. மாற்றப்பட்ட ஒரு ஆட்டக்காரர் மீண்டும் ஆடுகளத்திற்குள் வந்து விளையாட முடியாது.

4. ஒறுநிலை உதையின் போது, இலக்குக் காவலன் கடைக்கோட்டின் மேல் அசையாமல் நிற்பதற்குப்பதிலாக, கோட்டின் மேலேயே அங்குமிங்கும் இயங்கலாம்.

5. பந்து வந்து கைகளில் பட்டால் அது தவறு அல்ல. கையால் பந்தைத் தொடுவதுதான் தவறாகும்.

6. நிலை உதையிலிருந்து (Kick-off) நேராக எதிர்க்குழு இலக்கிற்குள் பந்தைச் செலுத்தி, வெற்றி எண் பெறலாம்.