பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 57

2. GrososoG5mGlsir (Boundary Lines)

ஆடுகளப் பகுதியின் எல்லைகள் எல்லாம் தெளிவாகத் தெரியும்படியாக 5 சென்டி மீட்டர் அகலக் கோடுகளால் குறிக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தக் கோடுகளிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரத்திற்கு வெளியே எந்தவிதமானத் தடைகளும் இருக்கக் கூடாது. ஆடுகளத்தின் நெட்டுப் பகுதியிலுள்ள கோடுகள் பக்கக் கோடுகள் என்றும்; குறைந்தளவு பகுதியிலுள்ள கோடுகள் கடைக்கோடுகள் என்றும்; கூறப்படும். இந்தக் கோடுகளுக்கும் பார்வையாளர்களுக்கும் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் 2 மீட்டர் தூரத்தில் தடுப்புக் கோடு ஒன்றும் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. Goldu Sul-Lib (Centre Circle)

1.80 மீட்டர் நீள ஆரம் கொண்ட மைய வட்டம் ஒன்று, ஆடுகளத்தின் நடுவிலே குறிக்கப்பட்டிருக்கும். இந்த வட்டத்தினுள் கடைக்கோடுகளுக்கு இணையாக ஒரு விட்டக்கோடு (Radius) கிழிக்கப்பட்டிருக்கும், வட்டத்தின் சுற்றளவு வெளிப் பகுதி யிலிருந்துதான் (ஆரத்தின் அளவு) அளக்கப்பட வேண்டும்.

4. நடுக்கோடு (முன் பகுதி, பின் பகுதி) (Centre Line)

கடைக்கோடுகளுக்கு இணையாக, பக்கக் கோடுகளின் நடுப்புள்ளியிலிருந்து, ஆடுகளத்தில் நடுவில் ஒரு நடுக்கோடு குறிக்கப்பட வேண்டும். அந்தக் கோடு ஆடுகளத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது.

ஒரு குழுவின் ஆடுகள முன்பகுதி (Front Court) என்பது, எதிர்க்குழுவின் கூடை உள்ள கடைக்கோட்டிலிருந்து, நடுக் கோட்டின் முன் விளிம்பு பகுதியான நடுக்கோடு வரை உள்ளது. நடுக்கோட்டிலிருந்து தாக்குகிற இலக்குள்ள எல்லைக் கோட்டின் பரப்பளவு முழுவதும் அந்தக் குழுவின் பின்பகுதியாகும். (Backcourt), 5. Olsusbl srstior sul L LigL (Point Field Goal area)

ஒவ்வொரு கடைக்கோட்டின் மைய இடத்திலிருந்து 6.25 மீடடர் தூரத்தில் அரை வட்டம் ஒன்று குறிக்கப்படவேண்டும்.

6. தனி எறி பரப்பும், தடுக்கப்பட்ட பகுதிகளும்

(Restricted, Free throw Lanes)

களத்திலுள்ள குறிக்கப்பட்டிருக்கும் தனி எறி பரப்பின்

கோடுகள், கடைக்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து 3 மீட்டர்

நீளத்தில் இரு புறங்களிலும் தொடங்குகின்றன. தனி எறிகோட்டின்