பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 63

களுக்காகவும் - பந்து நிலைப்பந்தானதும், ஆட்ட மணிப்பொறி உடனே நிறுத்தப்படும். அப்பொழுது குறிப்பாளர் உடனே சைகை கொடுப்பார். அந்த நேரத்தில், மாற்றாட்டக்காரரை ஆட்டத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த விதியை மீறுகின்ற பொழுது, அக்குழுவிற்கு எதிர்க் குழுவினர், வெளியேயிருந்து உள்ளெறிவதற்காக தங்கள் கையில் பந்து வைத்திருந்தாலும் கூட, அவர்களும் தமது மாற்றாட்டக்காரரைச் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு தரப்படும். இதுபோன்ற சூழ்நிலை அமைந்தால், எதிர்க்குழுவினர் மாற்றாட்டக்காரரை சேர்த்துக் கொள்ள அனுமதி பெறுவர்.

ஆடுகளத்திற்குள் நுழைவதற்கு முன், குறிப்பாளருக்கு அறிவிப்பதுடன், உடனே ஆடுவதற்கும் அந்த மாற்றாட்டக்காரர் தயாராக இருக்க வேண்டும். ஆட்ட அதிகாரிகள் குறிப்புக் காட்டி உள்ளே வரச்சொல்லும்வரை, எல்லைக்கோட்டுக்கு வெளியிலேயே தான் அவர் நின்று கொண்டிருக்கவேண்டும். அவ்வாறு அழைப்பைப் பெற்ற பின்பு, அருகிலே உள்ள யாராவது ஒரு ஆட்ட அதிகாரியிடம், தனது பெயர், ஆடும் எண், தன்னால் மாற்றப்படும் ஆட்டக்காரரின் பெயர், அவரது ஆடும் எண் (Number) போன்ற விவரத்தை அறிவிக்க வேண்டும்.

எந்த மாற்றாட்டக்காரரைச் சேர்த்தாலும், மாற்றுதலுக்காக, 20 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதாவது, எவ்வளவு விரைவாக மாற்றிவிட முடியுமோ, அவ்வளவு விரைவாக மாற்றிவிட வேண்டும். அவ்வாறு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அது ஓய்வு நேரமாகக் கணக்கிடப்பட்டுத் தவறிய குழுவுக்குத் தண்டனை போலத் தரப்படும். (வெற்றி எண் பெறுதலும், ஆட்டநேர விதிகளும் என்ற பகுதியின் 10-வது பிரிவைக் காண்க)

தனி எறி எறிவதில் ஒருமுறை எறிந்து வெற்றி பெற்ற ஒரு ஆட்டக்காரர், மாற்றப்படலாம். ஆனால், பந்துக்காகத் தாவும் (Jump Ball) நிகழ்ச்சியில் பங்கு பெறும் ஒரு ஆட்டக்காரர், பிறரால் மாற்றப்பட முடியாது. 4. பயிற்சியாளர்கள் (Coaches)

ஒரு குழுவின் பயிற்சியாளர் (coach), அந்தக் குழுவில் அவரும் ஒரு அங்கத்தினர் என்பதை எளிதாக அறிந்து கொள்ளும்படியாக, விளையாட்டுச் சீருடைகளை (TrackSuit) அணிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆட்டம் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்கூட்டியே, பயிற்சியாளர், குறிப்பாளரிடம் சென்று, விளையாடும் ஆட்டக்