பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 67

(எ) ஏதாவது தரை வழி மீறுதல் (Floor violation) நடக்கும் பொழுதும், வளையத்தில் ஏதாவது தடைகள் நேரும் பொழுதும், அல்லது தனி எறி நிகழும் பொழுதும் எறிகிறவரின் குழுவினர் தவறினால் விதியை மீறும் பொழுதும், அல்லது தவறு ஏதாவது நேர்கிற பொழுதும், பந்து நிலைப் பந்தாகிறது.

விதி விலக்குகள்: விதிகளுக்கு உட்பட்டு, அதன் வழி நடந்து, வளையத்தினுள்ளே பந்தை விழச் செய்து வெற்றி எண்ணைப் பெறலாம். அப்பொழுது பந்து நிலைப் பந்தாக மாறாது.

தனி எறி எறியும் பொழுதும், அல்லது ஆடிக் கொண்டிருக்கும் பொழுது வளையத்தினுள்ளே பந்தை எறியும் பொழுது மேல் நோக்கிப் பந்து சென்று கொண்டிருந்தாலும் (Flight) ஆட்ட அதிகாரிகளின் விசில் ஒலியானது வந்தாலும் அல்லது ஆட்டம் முடிவுற்றிருந்தாலும்,

ஒரு ஆட்டக்காரர் தன்னுடைய கையில் பந்தை வைத்துக் கொண்டு வளையத்தினுள் எறிய முயலும் நேரத்தில், எதிராளி ஒருவர் தவறிழைத்தும், அந்த நிலையில் அவர் தவறு நேர்வதற்கு முன் தனது எறியும் முயற்சியைத் தொடர்ந்து முடித்துக் கொண்டிருந்தாலும், இன்னும் பந்துக்காகக் குதிக்கும் விதிகளில் தண்டனையைத் தராது புறக்கணிக்கும் பொழுதும், பந்து நிலைப் பந்தாகிறது. 4. பந்து ஆட்டத்தில் உள்ளது (Ball alive)

(அ) நடுவர் எறிந்த பந்து (Toss), உச்சநிலை உயரத்திற்குச் சென்று வந்த பிறகு, ஒரு ஆட்டக்காரரால் முதலாவதாகத் தட்டப்படுகிற பொழுதும்.

(ஆ) தனி.எறி ஆட்டக்காரருக்கு, ஆட்ட அதிகாரியால் சூழ்நிலையை ஒழுங்குபடுத்திய பின், பந்து கொடுக்கப்படுகிற பொழுதும்,

(இ) எல்லைகளுக்கு வெளியேயிருந்து உள் எறியப்படும் பந்தானது, ஆடுகளத்தில் உள்ள ஒரு ஆட்டக்காரரைத் தொடும் பொழுதும் பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது (Ball Becomes Alive).

5. syl-L-ler Qpids (Decision of a Game)

ஆட்ட நேரத்திற்குள், அதிக வெற்றி எண்களைப் பெற்றிருக் கின்றதைப் பொறுத்தே, ஆட்டத்தின் முடிவு அதாவது வெற்றி தோல்வி கணிக்கப்படுகிறது.