பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 69

8. சமமான வெற்றி எண்கள் (Tie Score)

நான்காவது பருவத்தின் முடிவில், இரு குழுக்களும் சமமாக வெற்றி எண்களை எடுத்திருந்தால், ஐந்து நிமிடங்கள் கூடுதல் நேரம் (ExtraTime) கொடுக்கப்பட ஆட்டம் மீண்டும் தொடரும் அல்லது அந்த சமநிலையை (Tie) உடைத்தெறிய ஐந்து நிமிடங்கள் கொண்ட எத்தனை கூடுதல் நேரப் பருவமும் (period) மேற்கொள்ளப்படும்.

கூடுதல் நேரப் பருவம் கொண்டு தொடங்குகிற ஆட்டத்தின் போது, நாணயம் சுண்டி வெற்றி பெறுகிற குழு தேர்வு செய்வது பொறுத்துக் குழுக்கள் இடம்பெற்று, ஆடத் தயாராகும்.

மிகைநேரப் பருவங்களுக்கு இடையில்2 நிமிடம் இடைவேளை உண்டு. ஆட்டம் பந்துக்காகத் தாவுதல் மூலமே தொடங்கப்பட வேண்டும். 9. குழுத் தலைவர்கள் கவனத்திற்கு (To Captains)

பருவங்களுக்கிடையில் ஏற்படுகின்ற இடைவேளை நேரம் முடிவு பெறுவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர், குழுத் தலைவர்களின் கவனத்திற்கு அது கொண்டு வரப்படும். இரண்டாவது பருவத்தின் தொடக்கத்தில் அல்லது வேறு எந்தக் காரணத்திலாவது ஓய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு தொடங்கும் ஆட்டத்தில் விளையாடுவதற்கு நடுவர் அழைத்தபின், ஆடுகளத்திற்குள் ஆட ஒரு நிமிடத்திற்குள் வராமல் ஒரு குழு இருந்தால், இரு குழுக்களும் ஆடுகளத்தில் ஆடுவதற்குத் தயாராக இருப்பதுபோல் பாவித்து எப்பொழுதும்போல பந்து ஆட்டத்தில் இடப்படும். அதில் வரத் தவறிய குழு, ஆட்டத்தை இழந்துவிடும் (தோற்றுவிடும்).

நடுவர் ஆடஅழைத்த பிறகும் வரமறுக்கின்ற குழு, ஆட்டத்தை இழந்துவிடும். 10. ஆட்டம் நிறுத்தப்படும் நேரம்

கீழ்க்கண்ட காரணங்கள் பற்றி ஆட்ட அதிகாரிகள் சைகை

செய்யும் பொழுது, ஆட்டம் (Timeout) நிறுத்தப்படுகிறது. அதனால் ஆட்ட மணிப் பொறியும் (Game watch) நிறுத்தப்படுகிறது.

(அ) விதியை மீறியதற்காக (Violation) (ஆ) தவறுக்காக (Foul) (இ) பிடிநிலைப் பந்துக்காக (Held Ball)