பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விளையாட்டுக்களின் விதிகள்

ஒரு குழுவினரின் கட்டுக்குள் (control) பந்து இருந்திருந்தால், அக்குழுத்தலைவன் கூறும் ஒரு ஆட்டக்காரர்நிலைப்பந்தாக மாறிய இடத்திற்கு நேராக எல்லைக்கு வெளியே (மிக அருகாமையில்) யிருந்து கொண்டு, பந்தை உள்ளெறிய ஆட்டம் தொடங்குகிறது. எந்தக் குழுவும் தங்கள்வசம் பந்தினை வைத்திருக்காவிட்டால், நிலைப் பந்தாகப் பந்து மாறிய இடத்திற்கருகிலுள்ள வட்டத் திலிருந்து, பந்துக்காகத் தாவலின் மூலம் ஆட்டம் தொடங்கி வைக்கப்படும்.

(ஆ) தவறுக்குப் பிறகு - தாக்கப்பட்ட குழுவில் உள்ள ஒருவரால் உள்ளெறிதல் நிகழ அல்லது தனி.எறி எறிவோரால் எறியப்பட்ட அல்லது தவறு நிகழ்ந்த இடத்திற்கருகில் உள்ள வட்டத்தில் பந்துக்காகத் தாவல் நடைபெற ஆட்டம் தொடங்கும் (தனியார் தவறு என்ற பகுதியில் முதல் 5 பிரிவைக் காண்க.)

(இ) பிடிநிலைப் பந்திற்குப் பிறகு அல்லது பருவத்தின் முடிவுக்குப் பிறகு அல்லது களவெற்றி எண்ணுக்குப் பிறகு, அல்லது எல்லைகளுக்கு வெளியே பந்து சென்ற பிறகு, அல்லது தனிஎறி முடிவுக்குப் பிறகு, அல்லது விதியை மீறல் நடந்த பிறகு-அந்தந்த விதியில் கூறும் முறைப்படி ஆட்டம் தொடங்கப் பெறும். அவ்வாறு தொடங்குவதில் தவறு எதுவும் நிகழ்ந்தால், மேலேயுள்ள ஆ பிரிவின்படி ஆட்டம் தொடங்கப்பெறும்.

16. 39-Llo &sol-4, 3 flill—th (Last 3 Minutes)

எல்லா கூடுதல் நேரப் பருவங்களில் உள்ள கடைசி மூன்று நிமிடங்களில், எல்லா தனியார் தவறுகளும் (Personal Fouls) வெற்றி எண்ணுக்காகக் குறிபார்த்து பந்தை எறிபவர் மேல் வேண்டுமென்று செய்கின்ற தவறுகளாகவே கணக்கிடப்படும். தவறுக்குள்ளானவர், தனிஎறி தேவையா அல்லது ஆடுகளத்தின் மையக் கோட்டிற்கு நேராக உள்ள பக்கக் கோடுகளின் மைய வெளியேயிருந்து உள்ளெறியும் வாய்ப்பை பெறுவதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவர்.

தனிநிலைத் தவறு (Technical Foul) பெற்ற ஒரு எதிர்க்குழு ஆட்டக்காரருக்கு (பயிற்சியாளர், மாற்றாட்டக்காரர் அல்ல) எதிராகப் பெறும் தனி எறியில், இதே முறை பின்பற்றப்படுகிறது. அதை முடிவெடுக்கின்ற உரிமை தவறுக்குள்ளான (Offender) குழுத் தலைவனுக்கு உண்டு. வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் ஆட்டக்காரருக்கு ஆடுகளப் பகுதியின் வெளியே (கோடுகளுக்கு அருகில்) எந்த இடத்திலிருந்தாவது உள்ளெறியலாம் என்ற அனுமதி உண்டு.