பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விளையாட்டுக்களின் விதிகள்

19.8 solstmiq sil (Eight Seconds Rule)

ஆட்டத்தில், இரண்டாவது பருவத்தின் கடைசி மூன்று நிமிடங்களிலும், மற்ற எல்லா மிகை நேரப் பகுதிகளிலும், தாக்கும் குழுவானது, தனது வசமாகப் பந்து கிடைத்தவுடன், எட்டு வினாடிக்குள் ஆடுகள முன் பகுதிக்குப் பந்துடன் வந்து விளையாட வேண்டும்.

ஆடுகள முன்பகுதியில் (Front Court) பந்தைப் பெற்றிருக்கும் குழு, எக்காரணத்தை முன்னிட்டும் பந்தை பின் பகுதிக்கு அனுப்பக் கூடாது. ஆட்டத்தில் குறுக்கீடு நிகழ்ந்தாலும் சரி, அல்லது உள்ளெறி நிகழ்ந்தாலும் சரி, இந்தத் தடை விதி எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்த விதி நடுக்கோட்டிலிருந்து பந்திற்காகத் தாவலிலும் (16), முன் பகுதியில் கூறும் விதிகளிலும் பின்பற்றப்படுவதில்லை.

நடுக்கோட்டைத் தாண்டியுள்ள முன்பகுதியில் (Front Court) பந்து விழுந்தாலும், நடுக்கோட்டுப் பகுதியில் தொடர்பு கொண்டுள்ள ஒரு ஆட்டக்காரரின் மேல் பந்து பட்டாலும், அது ஆடுகளத்தின் முன் பகுதியில் இருப்பதாகவே கருதப்படும். பின்பகுதியில் இருப்பவர்களுக்கும் இதே விதிமுறை பொருந்தும். இதை மீறி நடந்தால், விதியை மீறியதாகக் கருதப்பட்டு, எதிர்க்குழுவினருக்கு உள்ளெறியும் வாய்ப்பு வழங்கப்படும்.

குறிப்பு:கடைசி மூன்று நிமிடங்களில், தவறிழைக்கப் பெற்ற ஒரு (Offended) குகுவினருக்கு, தனி எறி வேண்டுமா வெளியே யிருந்து, உள்ளெறிதல் வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. தவறு என்று கூறிய உடனேயே, குறிப்பாளருக்கும் சைகை காட்டிய உடனேயே, ஆட்ட அதிகாரிகள் அக்குழுத் தலைவனை அழைத்து என்ன வேண்டும் என்பதைக் கேட்டு அதன்படி விரைந்து செயல்பட வேண்டும். குழுத் தலைவனது முடிவே முடிவாகும்.

20.28 solormiq Sol (Twenty Eight-Second Rule)

தன்வசம் பந்தை வைத்திருக்கும் ஒரு குழு, 28 வினாடி களுக்குள்ளாக, எதிரணி வளையத்திற்குள் பந்தை எறிய முயல வேண்டும். அப்படிச்செய்யத் தவறினால் அது விதியை மீறியதாகும்.

தண்டனை தவறு நடந்த இடத்திற்கருகிலுள்ள எல்லைக்கு வெளியேயிருந்து, பந்தை உள்ளெறியும் வாய்ப்பு எதிராளிக்குக் கொடுக்கப்படும்.