பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 77

குதிக்கும் இருவரும் பந்தை ஈரிரு முறைத் தொட, நான்கு முறைப் பந்தைத் தட்டக்கூடிய ஒரு சூழ்நிலையும் உண்டாகிறது.

பந்துக்காகத் தாவல் நடக்கும் பொழுது, மற்ற 8 ஆட்டக் காரர்களும் பந்து தட்டப்படும் வரை, அந்த வட்டத்திற்கு வெளியிலேயே நிற்க வேண்டும். ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் வட்டத்தைச் சுற்றி அருகருகே நின்று இடம் பிடிக்காமல், அந்த இடங்களில் எதிராளியும் நிற்க விரும்பினால், இடம் தரவும் வேண்டும்.

பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சி நடக்கும் பொழுது, தாவும் ஆட்டக்காரர்களுக்கு இடையூறு செய்யாமல் மற்ற ஆட்டக்காரர்கள் இருக்கின்றனரா என்பதை நடுவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும்.

3. solou 5msrl_60 (Jump Ball)

ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும், ஒவ்வொரு மிகை நேரப் பகுதியின் தொடக்கத்திலும், மைய வட்டத்திற்குள்ளும் அல்லது வெளியிலும் ஏற்படுகிற பிடிநிலைப் பந்தின் காரணமாகவும் இரட்டைத் தவறு (Double Foul) ஏற்படும் பொழுதும் மைய வட்டத்தில் இருந்து மையத் தாண்டலின் (Centre Jump) மூலமாக ஆட்டம் தொடங்கி வைக்கப்படும்.

4. பந்து ஆட்டத்தில் இருக்கிறது (Ball in)

பந்து ஆட்டத்தில் இருக்கிறது என்பது ஆட்ட அதிகாரிகள், பந்திற்காகத் தாவலை நிகழ்த்த, தங்களுக்குரிய இடத்திலே நிற்கும் பொழுது அல்லது தனி எறியை நிகழ்த்தத் தங்களுக்குரிய இடத்தில் நிற்கும்பொழுது, எல்லைக்கு வெளியேயிருந்து உள்ளெறிதல் நிகழ்த்த, அதற்குரிய ஆட்டக்காரரிடம் பந்தைக் கொடுத்தவுடன் பந்து ஆட்டத்தில் இருக்கிறது என்று தெளிவாகிறது. 5. தனிப்பட்ட சூழ்நிலையில் பிடிநிலைப் பந்து (Held Bail)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இருவர், ஒரு கையால் அல்லது இரு கைகளால் பந்தை வலிமையாகப் பற்றி இழுக்கும் நிலையே பிடிநிலைப் பந்து (Held Ball) என்று கூறப்படும். அல்லது மிக அருகாமையில் எதிராளிகளால் சூழப்பட்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர். யாருக்கும் பந்தை கொடுக்காமல், தானே 5 விநாடிக்கு மேல் வைத்திருப்பதும் பிடிநிலைப் பந்து என்று கூறப்படும். பந்தை விளையாடுதல் என்பது வழங்குதல், எறிதல், தட்டுதல் அல்லது பந்துடன் ஒடல் முதலிய செயல்களாகும்.