பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விளையாட்டுக்களின் விதிகள் *ES

நடுவர்கள், பிடிநிலைப் பந்து என்று இழுபறி தொடங்கிய உடனேயே அறிவித்துவிடக் கூடாது. அதனால், ஆட்டத்தின் தொடர்ச்சி அறுபட்டு விடுவதுடன், பந்தைத் தன்வசம் பெற்றிருப்பவரிடமிருந்து அநியாயமாகப் பந்தை எடுத்துக் கொண்டதுபோல அச்செயல் ஆகிவிடும். இந்த விதியின் முதல் பிரிவின்படி, இரண்டு ஆட்டக்காரர்களும், ஒரு கையால் அல்லது இரு கைகளாலும் பந்தை உறுதியாகப் பற்றி இழுக்கும் பொழுது, அவரில் ஒருவர் வன்மையை உபயோகிக்காமல் பந்தைப் பெறக்கூடும் என்ற நிலையிருக்குமானால், உடனே பிடிநிலைப் பந்து என அச்செயலை அழைக்கக் கூடாது. வாய்ப்புத் தரவேண்டும்.

தடுக்கும் குழுவைச் சேர்ந்த ஒரு ஆட்டக்காரர், பந்தின் மேல் தன் கைகளை வைத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக, கட்டாயமாக அதைப் பிடிநிலைப் பந்து எனச் சொல்ல வேண்டுமென்பதில்லை. பொதுவாக இவ்வாறு எடுக்கப்படும் முடிவு, தன்வசம் பந்தை உறுதியாகப் பெற்றிருக்கும் ஒரு ஆட்டக்காரருக்கு, அநீதி இழைத்தது போல் ஆகிவிடும். உறுதியாகப் பற்றித் தன்வசம் பந்தைப் பெற்றிருக்கும் ஒரு ஆட்டக்காரர், உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ இருந்தாலும், அவர் பந்தை தூக்கி எறிவதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஏதாவது அபாயம் அங்கு நிகழும் என்றிருந்தால்தான் பிடிநிலைப் பந்து என்று கூற வேண்டும்.

6. பிடிநிலைப் பந்து ஏற்பட்டால்

(அ) தனிஎறி எல்லைக்குள்ளும், அதற்கருகிலுள்ள பரப்பிலும் பிடிநிலைப் பந்து ஏற்பட்டால், அதற்கருகேயுள்ள தனிஎறிக்கோடு உள்ள வட்டத்திலிருந்து, பந்தை உயரே எறிந்து (Jump Ball) ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். அல்லது

(ஆ) மைய வட்டத்தினுள்ளும் அல்லது அதற்கு வெளியேயுள்ள பரப்பிலும், இன்னும் ஐயத்துக்கிடமான எல்லா சூழ்நிலைகளிலும், மைய வட்டத்திலிருந்தே பந்தை உயரே எறிந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

(இ) வளையத்தைத் தாங்கியுள்ள பகுதிகளில் பந்து தேங்கிக் கொண்டால் (Lodge) அதற்கு அருகேயுள்ள தனிஎறிக் கோட்டின் வட்டத்திலிருந்து பந்துக்காகத் தாவல் நடைபெற வேண்டும். பெருங்குற்றமாக விளங்கும் தனிநிலைத் தவறினால் (Technicalfoul) தனி எறியில் பந்து தேங்கிக் கொண்டால், எப்பொழுதும் போலவே ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.