பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 81

தடுக்கத் தயார் செய்து கொள்வதற்காக ஆட்டத்தைத் தாமதப்படுத்த அல்ல.

3. சந்தேகத்துக்குரிய முடிவுகள்

இரு எதிராளிகள் சேர்ந்தாற்போல் கடைசியாகத் தொட்டதால் பந்து எல்லைக்கு வெளியே சென்றாலும், அல்லது கடைசியாகப் பந்தைத் தொட்ட ஆட்டக்காரர் யார் என்று நடுவருக்கு ஐயம் ஏற்பட்டாலும், அல்லது இரு நடுவர்களுக்கிடையே கருத்துப்பேதம் ஏற்பட்டாலும், அதில் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து, அருகிலுள்ள வட்டத்தில் நிற்க வைத்து பந்தக்காகத் தாவலின் மூலம் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

6.5sof stol (Free Throw) 1. தனிஎறி

தனி.எறிக் கோட்டின் பின்னால் நின்று கொண்டு எந்தவிதத் தடையுமின்றி, வளையத்தினுள் நேரே பந்தை எறிந்து ஒரு வெற்றி எண்ணைப் பெற, ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனிஎறி (Free Throw) staitugimoth.

2. தனிஎறி நிகழ

தனியார் தவறு (Personal Fouls) என நடுவர் குறிப்பிட்டு தவறிழைத்தவரின் ஆடும் எண்ணைக் குறிப்பாளருக்குக் கூறுவார். தவறுக்குத் தண்டனையாக தனி எறியைக் கொடுத்தவுடன், தனி.எறிக் கோட்டிற்குப் பந்துடன் நடுவர் சென்று, தனி.எறி எடுக்கின்ற ஆட்டக்காரரை தவறுக்கு ஒழுங்குபடுத்தி விட்டு, பந்தை அவரிடமும் கொடுத்து எறியச் செய்ய வேண்டும். பலமுறை எறியப்படுகின்ற ஒவ்வொரு தனி எறிக்கும் இதேமுறைதான் பின்பற்றப்பட வேண்டும். தனி எறி நிகழ்கின்ற பொழுது, தனிஎறி வட்டத்திற்கு முன்னுள்ள இரு கோடுகளின் மேலுள்ள இடங் களிலெல்லாம் இரு குழுவினரும் ஒருவர் விட்டொருவர் என மாறி மாறி நிற்கலாம். வளையத்திற்கு அருகிலுள்ள இடங்கள், இரண்டிலும் எறிபவருடைய எதிர்க்குழுவினர் இருவர் நிற்பார்கள்.

பயிற்சியாளர்கள் அல்லது மாற்றாட்டக்காரர்கள் பெறுகின்ற தனிநிலைத் தவறுக்காகத் (Technical Foul) தரப்படும் தனி.எறிக்கு, தனி.எறி எல்லைக் கோட்டில் ஆட்டக்காரர்கள் வரிசையாக நிற்கக் கூடாது. (தனி நிலை தவறு என்ற பகுதியில் 3-வது பிரிவைக் காண்க.)