பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விளையாட்டுக்களின் விதிகள் *>

3. 3sfersolsou st(\tilisuff (Free Thrower)

தனியார் தவற்றை குறித்துக்காட்டிவிட்டு அதற்குரியத் தண்டனையாகத்தனி எறியையும் தந்துவிட்டு, அந்த எறிகளை எறிய தவறுக்குள்ளான ஆட்டக்காரரையும் நடுவர் குறிப்பிடுவார். மற்ற ஆட்டக்காரர்கள், யாராவது தனி எறியை எறிய முயன்றாலும், அல்லது எறிந்து வெற்றி பெற்றாலும், அவை கணக்கில் சேர்க்கப்பட மாட்டா. வளையத்தினுள் பந்து விழுந்தாலும் அல்லது தவறினாலும், அதை நடுவர் எடுத்து எதிர்க்குழுவினரிடம் கொடுத்து, அதைத் தனி எறிக் கோட்டிற்கு எதிரேயுள்ள பக்கக் கோட்டிற்கு வெளியேயிருந்து உள்ளெறிய ஆணையிடுவார்.

தனி.எறி எறிவதற்காகக் குறிப்பிடப்பட்டவர்காயமுற்று அதனால் ஆடமுடியாமல் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை யிலிருந்தால், அவருக்கு மாற்றாளாக வரும் ஆட்டக்காரரே தனிஎறி அல்லது தனி.எறிகளை எடுக்க வேண்டும்.தவறுக்குள்ளாக்கப்பட்டவர் ஆள் மாற்றுதல் (Substitution) காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியே செல்ல நேர்ந்தால் அதற்கு முன் தனி எறியை அல்லது எறிகளையோ எடுக்க வேண்டும். (மாற்றாட்டக்காரர் பகுதியைக் காண்க) மாற்றாட்கள் மாறுவதற்கு இல்லாத பொழுது, குழுத் தலைவனாலோ அல்லது அவனால் நியமிக்கப்படும் ஆட்டக்காரராலோ தனிஎறி எடுக்கப்படலாம்.

தனிநிலைத் தவறுக்காகத் தரப்படும் தனி எறியை, எதிர்க் குழுவினரில் உள்ள யாராவது ஒருவர் எடுக்கலாம்.

4. தனி எறியாளருக்குரிய இடம்

தனி எறிக் கோட்டில் நின்று கொண்டிருக்கும் தனி எறியாளர், தன்கையில் பந்து கிடைத்த5 விநாடிகளுக்குள் வளையத்தை நோக்கி எறிய வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு தனி எறியிலும் பின்பற்ற வேண்டும்.

தனி எறியாளர் உடனே சென்று, தனி எறிக்கோட்டின் பின்புறம் நிற்க வேண்டும். அவர் பந்தை எறிவதற்கு எந்த முறையையேனும் (System) பின்பற்றலாம். ஆனால், வளையத்தையோ பின் பலகையையோ தொடும் வரை, தனி எறிக் கோட்டையோ அல்லது அந்தக் கோட்டுக்கு அப்பாலுள்ள ஆடுகளத் தரையையோ தொடக் கூடாது. தனி எறியாளருக்கு மன உலைவு தரும்படி, மற்ற ஆட்டக் காரர்கள் நடந்து கொள்ளக் கூடாது. மற்ற ஆட்ட அதிகாரிகளும் தனி எறிப்பரப்பில் நிற்பதோ அல்லது பின் பலகைகளுக்குப் பின்னால் நிற்பதோ கூடாது.