பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 85

பக்கக் கோட்டின் வெளியேயிருந்து பந்தை உள்ளெறிவார். தனிநிலைத் தவறினால் (பயிற்சியாளர் அல்லது மாற்றாட்டக்காரர் செய்ததவறு) வரும் தனி எறியாக இருந்தால், எறிந்தவரின் குழுவினர் நடுக்கோட்டுக்கு நேரேயுள்ள பக்கக் கோட்டிற்கு வெளியே இருந்து பந்தை உள்ளெறிவார்.

(ஆ) தனி எறியாளரின் பாங்கர் - விதியை மீறினால், தனி எறி வெற்றியடைய அது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். அப்பொழுது விதியை மீறிய செயல் புறக்கணிக்கப்படும். தனிஎறி வெற்றி பெறாவிடில் மேலே கூறியது போல விதிமீறல் தண்டிக்கப் படும். வளையத்திற்குள் பந்து நுழையாமல் எல்லைக்கப்பால் சென்றாலும், தவறிய பின்னர் எல்லைக்குள்ளே கிடந்தாலும் எவ்வாறாயினும் தனி எறிக்கோட்டுக்கு எதிரேயுள்ள பக்கக் கோட்டிலிருந்து பந்தை உள்ளெறிந்து ஆட்டத்தைத் தொடங்கும் வாய்ப்பை எதிர்க்குழுவினர் பெறுவர்.

(இ) தனி எறியாளரின் எதிராளிகள் விதியை மீறினால்:

தனி.எறி வெற்றி பெற, அது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். அப்பொழுது விதியை மீறிய செயல் புறக்கணிக்கப்படும். அந்தத் தனி எறி வெற்றிபெறாவிடில், முன்னே கொடுக்கப்பட்டுள்ளதனி.எறி வாய்ப்பைப் போலவே மீண்டும் எறிய, ஒரு புதிய வாய்ப்பு அளிக்கப்படும். இதுபோன்ற நிலைகளில் எறி முடிகிற வரைக்கும் பந்து நிலைப்பந்தாக (Dead Ball) மாறாது.

(ஈ) இரு குழுக்கள் விதியை மீறியும், தனி எறி வெற்றி பெற்றால் வெற்றி எண் கணக்கில் சேரும். விதிமீறல் புறக்கணிக்கப்படும். தனி.எறி வெற்றி பெறாவிடில், மிக அருகாமையில் உள்ள வட்டத்திலிருந்து பந்திற்காகத் தாவல் (Jump Ball) மூலம் ஆட்டம் தொடங்கும்.

பலமுறை எறிகிற வாய்ப்புள்ள பொழுது (Multiple Throw) கடைசியாகப் பந்தை எறியும் முறை வருகிறபோதுதான் பந்து எல்லைக்கு வெளியே செல்லுதல் பந்துக்காகத் தாவல் போன்ற விதி மீறலுக்குரிய தண்டனைகளை நிறைவேற்ற முடியும். பலமுறை எறிதல் என்பது ஒரே குழு பலமுறை தொடர்ந்தாற்போல் தனி எறியை எறிய முயற்சிக்கும் வாய்ப்பாகும். 2. பந்து வெளியே போகக் காரணமாயிருந்தவர்

எல்லைக் கோட்டுக்கருகில் பந்தை தன் கைவசம் வைத்திருப்பவர், வேகமாக இடித்துத் தள்ளப்பட்டு, எல்லைக்கு வெளியே சென்றால், பந்தை உள்ளே எறிகிற வாய்ப்பை அவருக்கு