பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

நடுவர்கள் அளிக்க வேண்டும். எந்தக் குழு பந்தை வெளியில் அனுப்பக் காரணமாயிருந்தது என்ற ஐயம் ஏற்பட்டால், பந்துக்காகத் தாவும் முடிவை நடுவர்கள் அறிவிக்க வேண்டும்.

தண்டனை: விதிமீறல் நடைபெறுகிற பொழுது பந்து நிலைபந்தாகிறது. விதி மீறல் நடந்த இடத்திற்கருகில், எல்லைக்கு வெளியேயிருந்து பந்தை உள்ளெறியும் வாய்ப்பு அருகேயுள்ள எதிராளிக்குத் தரப்படுகிறது. 3. பந்தை விளையாட்டில் இடுவதில் விதியை மீறுதல்

எல்லைக்கு வெளியேயிருந்து பந்தை விளையாட்டில் இடுவதில் ஏற்படுகின்ற விதி மீறல்களை கட்டுப்படுத்துகின்ற முறைகள்.

(அ) உள்ளெறியுமாறு கொடுத்த பந்தைத் தூக்கிக் கொண்டு ஆடுகளத்திற்குள் வரும் ஆட்டக்காரரையும், எறிந்த பந்தை மாற்று ஆட்டக்காரர்கள் தொட்டு விளையாடுவதற்கு முன் தானே ஆடுவதையும், பந்தை விளையாட்டில் இட5 விநாடிகளுக்கு மேல் வீணாக்குதல் முதலிய எல்லாவற்றையும் நடுவரானவர் தடைசெய்ய வேண்டும்.

(ஆ) கோட்டுக்கு அப்பால் பந்தை எறிவதற்கு முன், எல்லைக் கோட்டை மீறி மற்ற ஆட்டக்காரர்கள் வருதல் (உடலின் எந்த பாகம் கோட்டினைத் தொட்டாலும் ஆள் என்றே கருதப்படும்) அல்லது அடுத்த குழுவினருக்கு உள்ளெறிய வழங்கியப் பந்தை எடுத்து மற்றவர் விளையாட்டிலிடுதல் எல்லாம் தடைசெய்யப்படவேண்டும்.

4. LGSL-6r D-60 (Dribbling)

கீழே குறிப்பிட்டுள்ளக் கட்டுப்பாட்டின்படி பந்தைத் தட்டிப் பிடித்துக் கொண்டு, எந்தத் திசைப் பக்கமேனும் முன்னேறிக் கொண்டு செல்லும் முறையைத்தான், பந்துடன் ஒடல் (Dribbling) என்கிறோம்.

கட்டுப்பாடுகள் 1-ஆவது முறை: முன்னேறிக்கொண்டிருக்கும் பொழுது பந்தைப் பெறுகிற ஒருவர், ஏதாவது ஒரு காலை நிலையானதாகவும் (Pivot) மற்றொன்றை நகரும் காலாகவும் உபயோகிக்கலாம்.

2-ஆவது முறை: முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர் பந்தைப் பெறுகிற பொழுது அல்லது பந்துடன் ஒடல் (Dribble) முடிவு பெறுகிறபொழுது, நகராமல் நிற்பதற்கு அல்லது