பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 87

பந்தை அனுப்பிவிடுவதற்கு இரண்டென எண்ணும் முறை பின்பற்றப் படுகிறது.

626.1%lspets 616&Igol60 (One Count Rhythm) @(361st Lis605 அடையும் நேரத்தில், அதைப் பெறும் பொழுது ஏதாவது ஒரு கால் தரையைத் தொட்டுக் கொண்டிருந்தால், அல்லது (ஆ) ஏதாவது ஒரு கால் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கிற பொழுது, அல்லது அவர் பந்தைப் பெறுகின்ற நேரத்தில் தரையை விட்டு மேலே குதித்துக் கொண்டிருந்துவிட்டு சேர்ந்தாற்போல் காலிரண்டால் தரையைத் தொடும் பொழுதும், ஒன்று என எண்ணுதல் கையாளப்டுகிறது.

@(IB(960sp 616&Tg).360: (Two count Rhythm) solmg/g, ஒருமுறை எண்ணுதல் முடிந்த பிறகு, ஏதாவது ஒரு கால் தரையைத் தொட்டுக் கொண்டிருத்தல் அல்லது இரண்டு கால்களும் சேர்ந்தாற்போல் தரையைத் தொட்டுக் கொண்டிருத்தல்.

ஓடிவரும் ஒரு ஆட்டக்காரர் சரியாக நிற்கிற பொழுது (Legal Stop) ஒரு காலைவிட மற்றொரு கால் முன்னதாக (Advance) இருந்தால் அங்கே சுழல்தப்படி (Pivot) உண்டாகும். ஆனால் பின்னால் இருக்கும் காலே நிலையான காலாகப் (Pivot foot) பயன்படும். ஒன்றைவிடமற்றொன்று முன்னது பின்னதாக இல்லாமல் இரண்டு கால்களும் சம நிலையிலிருந்தால், ஏதாவது ஒரு காலை நிலையான காலாக ஆக்கிக் கொள்ளலாம்.

3-ஆவது முறை: நிலையாக நின்று கொண்டிருக்கிற ஒரு ஆட்டக்காரர், பந்தைப் பெறுகிறபொழுது அல்லது பந்தைப் பிடிக்கும் நேரத்தில் சரியாக நின்றுவிடுகிற பொழுது,

(அ) பந்தை வழங்குவதற்காகவோ அல்லது வெற்றி எண் பெறுவதற்காகவோ நிலையான காலை உயர்த்தி அல்லது தாண்டிக் குதித்துப் பந்தை எறியலாம். ஆனால், அவரது ஒரு கால் அல்லது கால்கள் மீண்டும் தரையைத் தொடும்போது அவரது கைகளை விட்டு பந்து சென்றிருக்க வேண்டும்.

(ஆ) பந்துடன் ஒடத் தொடங்குகிற பொழுது பந்து அவரது கைகளை விட்டுச்செல்வதற்கு முன், நிலையான காலை உயர்த்தவே கூடாது.

சுழல் தப்படி. பந்தைப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆட்டக்காரர், ஒரு தடவை அல்லது பல தடவை அதே காலால் எந்தத் திசை பக்கமாவது தப்படியை எடுத்து வைக்கிறார் என்றால், தரையுடன் தொடர்புள்ளதாக வைத்திருக்கும் மற்றொரு காலே நிலையான கால் என்று அழைக்கப்படுகிறது.