பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விளையாட்டுக்களின் விதிகள் . “TE

5. பந்துடன் ஒடல் - பந்தை உதைத்தல் - மூடிய

கைகளால் அடித்தல்

வேண்டுமென்றே செய்வதற்காக பந்தைக் காலால் உதைத்தல் என்பது விதியை மீறுவதாகும். எதிர்பாராத விதமாக பாதத்தாலோ அல்லது காலாலோ பந்தை அடித்தால் அது விதியை மீறுவதாகாது.

தண்டனை: விதிமீறல் நிகழும்போது, பந்து நிலைப்பந்தாக மாறுகிறது. விதிமீறல் நிகழ்ந்த இடத்திற்கருகிலுள்ள பக்கக் கோட்டுக்கு வெளியேயிருந்து உள்ளெறியும் வாய்ப்பு எதிராளிக்குக் கிடைக்கிறது. விதிமீறலால் பந்துநிலைப்பந்தாக இருக்கும்பொழுது, வளையத்திற்குள் பந்து நுழைந்தால், அதற்கான வெற்றி எண்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. (கீழேயுள்ள 8-வது விதியைக் காண்க).

6. பந்துடன் ஒடல்

தன் கட்டுக்குள் பந்தைப் பெற்ற ஒரு ஆட்டக்காரர், அப்பந்துக்கு வேகம் கொடுத்து எறிந்து தட்டித் துள்ள விட்டு அல்லது உருட்டி, அதை மற்றவர் யாரும் தொடுவதற்கு முன், தானே மீண்டும் அதைத் தொட்டு விளையாடுவதற்குப் பந்துடன் ஒடல் (Two Count Rhythm) என்று பெயர்.

ஒருமுறை மேலாக (Air) எறிந்து பந்துடன் ஒடலாம் என்பதைத் தவிர, பந்துடன் ஒடலில் பந்து தரையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். மேலாக எறிந்துப் பந்துடன் ஒடல் என்பது மேலாகப் பந்தைத் தூக்கி எறிந்து அது தரையைத் தொடும் முன்னர் தானே மீண்டும் தொட்டு விளையாடுவதாகும்.

முன்னே கூறியபடி பந்துக்கு விசை கொடுத்து ஆடிய பின்னர், இரு கைகளாலும் சேர்ந்தாற்போல் பந்தைப் பிடித்தாலும் அல்லது ஒரு கை அல்லது இரு கைகளில் பந்து வந்து தங்கிவிட அனுமதித்தாலும், அந்த ஆட்டக்காரரின் பந்துடன் ஒடல் உடனே முடிவு பெறுகிறது.

தொடர்பு இல்லாத பொழுது ஒரு ஆட்டக்காரர் பந்துடன் எத்தனைத் தப்படிகளேனும் எடுத்து வைக்கலாம். அதற்கு ஒரு வரையறையும் கிடையாது. இன்னும், பந்துடன் ஒடும்போது பந்து துள்ளுவதற்கிடையில் அவரது விருப்பம் போல் எத்தனைத் தப்படிகளும் வைக்கலாம்.

விதிவிலக்கு: தொடர்ந்தாற்போல் வளையத்தினுள் பந்தை எறியும் முயற்சிகள். குழப்புதல் (Fumbles) மற்ற ஆட்டக்காரர்கள்