பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விளையாட்டுக்களின் விதிகள் =>

தவறுதல்களினால் ஆட்டத்தில் மாறுதலேதும் நிகழப் போவது மில்லை. செயல்படும் பண்புகளில் தவறு நிகழும்போது, அது குற்றமாகப்படுவதில்லை. ஆனால், நடுவரின் எச்சரிக்கைக்குப் பிறகு, செய்ததவற்றையே மீண்டும் திரும்பிச் செய்கிற ஆட்டக்காரருக்கும் குழுத் தலைவனுக்கும் தனி நிலைத் தவறு தரப்படுகிறது.

வேண்டுமென்றே செய்யப்படுகிற தனி நிலைத் தவறுகள், அல்லது பண்பற்ற செயல்கள் அல்லது தவறை இழைப்பவருக்கு சாதகமான பலன் தரும்படி அதனால் ஏற்பட ஏதுவாக இருக்கும் செயல்கள் எல்லாம், அதற்கேற்றபடிதக்கவாறு, தனிநிலைத் தவறின் அடிப்படையில் தண்டிக்கப்படும்.

தண்டனை: ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒவ்வொரு முறை குற்றஞ்சாட்டப்பட்ட, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இரண்டு தனி எறிகள் தண்டனையாகத தரப்படுகின்றது. தனி எறியாளரை எதிர்க்குழுத் தலைவர் நியமிப்பார். படுமோசமாக அல்லது பிடிவாதமாக மேலே கூறியுள்ளவைகளைத் தொடர்ந்து செய்கின்ற ஆட்டக்காரர், நீக்கப்படுவதோடல்லாமல், ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படுவார்.

2. பயிற்சியாளர் அல்லது மாற்றாட்டக்காரர் இழைக்கும்

தனிநிலைத் தவறுகள்

காயம்பட்ட ஆட்டக்காரரைக் கவனிக்க, நடுவரின் அனுமதி யின்றி ஆடுகளத்தினுள் நுழைவதோ அல்லது எல்லைக்கு வெளியே யிருந்து கொண்டு, ஆடுகளத்தினுள் நிகழ்வனவற்றிக்காகத் தன் இடத்தை விட்டகன்று பின் தொடர்வதோ அல்லது ஆட்ட அதிகாரிகளை (குறிப்பாளர், நேரக்காப்பாளர், 28 விநாடி கண்காணிப்பாளர் உட்பட) அல்லது எதிராளிகளை மரியாதை யின்றிப் பேசுவதோ கூடாது.

ஓய்வு நேரத்தில் ஆடுகளத்தினுள் நுழையாமல், ஆட்டக்காரர் களுக்கு குறிப்புரை வழங்கப் பயிற்சியாளருக்கு (coach) உரிமை உண்டு. ஆட்டக்காரர்களும் நடுவர்களிடமும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தால் ஒழிய, எல்லைக் கோட்டைக் கடந்து வெளியே வரக்கூடாது. ஆடுகளத்தினுள் நுழையாமல்,

மாற்றாட்டக்காரர்களும் கூர்ந்து கவனிக்கலாம்.

பயிற்சியாளர்களும் மாற்றாட்டக்காரர்களும் இழைக்கின்ற விதி மீறல்களிலும்கூட, தெரியாமல் செய்வது வேண்டுமென்றே செய்வது என்ற இரண்டு பிரிவு உண்டு. (மேலே உள்ள (அ) பிரிவைக் காண்க).